360: அம்பேத்கர் பேசுகிறார்

By செய்திப்பிரிவு

யார் ஒருவர் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறாரோ, யார் ஒருவர் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறாரோ, அடுத்தவர் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்று இருக்கிறாரோ, அவரே சுதந்திரமான மனிதர் என்பேன்.

அரசியல் கொடுமையைவிட சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே, சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியைவிடத் தீரம் மிகுந்தவர்.

சாதி என்பது இந்துக்கள் பிறருடன் கலக்காதவண்ணம் செங்கற்களால் கட்டப்பட்ட சுவரைப் போலவோ, கம்பி வேலி போன்றோ தகர்ப்பதற்குரிய பௌதிகமான பொருள் அல்ல. சாதி என்பது ஒரு எண்ணம்; அது ஒரு மனநிலை.

இந்து சமூகம் தன்னைச் சமத்துவத்தின் அடிப்படையில் மறுகட்டமைப்பு செய்துகொள்ள வேண்டுமென்றால், சாதியை ஒழிக்க வேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன?

ஜனநாயகம் என்பது வெறுமனே அரசாங்கத்தின் ஒரு வடிவம் அல்ல. அது முதன்மையாக ஒருவருக்கொருவர் கூட்டுறவுடன் வாழும் நிலை, எல்லோருடைய கூட்டனுபவ வாழ்க்கை நிலை. அது அடிப்படையில் சக மனிதர்களிடம் கொள்ளும் மதிப்பையும் மரியாதையும் உணர்த்துவது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

36 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்