ஒரு நிமிடக் கட்டுரை: போஸ்டர் போராளி!

By சந்தனார்

யக்குநர் ராம், ‘தரமணி’ போஸ்டர்கள் மூலம் தமிழ் சினிமாவின் பழைய அரசியல் குணத்தை மீட்டெடுத்திருக்கிறார். படத்தில் அரசியல் பேசுவதே அரிதாகிவிட்ட காலத்தில், போஸ்டர்களிலேயே அரசியல் கதையாடல்களைத் தொடங்கியிருக்கிறார்.

படத்தில் பெண்கள் மது அருந்துவதுபோல் வரும் காட்சிகளை நீக்காவிட்டால் ‘ஏ’ சான்றிதழ்தான் கிடைக்கும் என்று தணிக்கைக் குழுவினர் சொன்னதால், ‘என் படத்தை வயது வந்தவர்கள் மட்டும் பார்த்தால் போதும்’ என்று சொல்லி ‘ஏ’ சான்றிதழைக் கேட்டுப் பெற்றார். தொடர்ந்து ‘ஆண் ராவாக மது அருந்தினால் யு/ஏ; பெண் ராவாக மது அருந்தினால் ஏ’ எனும் வாசகங்களை போஸ்டரில் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார். ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் வாசகம் (‘ஆதார் இல்லாம லவ் பண்ணக் கூடாதுன்னு நெஜமாவே எனக்குத் தெரியாது’), நீட் தேர்வு விவகாரம் தொடர்பான விமர்சனம் (‘தம்பி, நீ எவ்வளவு நீட்டி நீட்டிக் கேட்டாலும் இனிமே டாக்டர் ஆகறதெல்லாம் ரொம்பக் கஷ்டம்’), கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான புறக்கணிப்புகளை விமர்சிக்கும் வாசகம் (‘கீழடியைத் தோண்டறதுல உங்களுக்கு என்ன ஜீ பயம்? பிரிண்ட் பண்ணின ஹிஸ்ட்ரி புக்ஸ் எல்லாம் வேஸ்ட் ஆயிடும்னா?’) என்று நிஜமாகவே கவனம் ஈர்க்கிறார்.

தமிழர்களின் உரிமை தொடர்பான போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர் ராம். இன்றைய தமிழ்த் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இப்படிச் செய்பவர்கள்தான் என்றாலும் ‘படைப்பு’ என்று வரும்போது, அரசியல் கருத்துகள் இடம்பெறாமல் தப்பித்துக்கொள்வார்கள். ராம் பட்டையைக் கிளப்புகிறார். படம் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர் இப்படிச் சொல்கிறது: ‘திரையரங்குகளில் அரசு விளம்பரங்கள் திரையிடப்படும்போது, திரைப்பட விளம்பரங்களில் நாட்டு நடப்புகளைச் சொல்லலாம்தான். வாழ்க ஜனநாயகம்!’

வாழ்க ஜனநாயகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்