2 மினிட்ஸ் ஒன்லி 15: யாரும் அழலாம்!

By ஆர்.ஜே.பாலாஜி

கடந்த வாரம் நான் எழுதும் போது ‘மீ டூ – மூவ்மென்ட்’ (#Me Too) உலகம் முழுக்க பரவி எப்படி இந்தியா, தமிழ் நாட்டுக்குள் வந்திருக்கிறது என் பது பற்றி எழுதியிருந்தேன். கூடவே அது பணம், அதிகாரம் இப்படி எல்லாவற்றையும் கடந்து எந்த வகையில் பயத்தை ஏற்படுத்தி யிருக்கிறது என்பதையும் பார்த் தோம்.

இனிமேல், அலுவலகத்தில் தனியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு தொந்தரவு கொடுக்கும் மனநிலை, அவரது உயர் அதி காரிக்கு அவ்வளவு எளிதில் வராது.

அப்படிச் செய்தால் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விடுவார் என்கிற உள் உணர்வை இந்த ‘மீ டூ’ வழியே இன்றைய சமூக வலைதளங்கள் ஏற்படுத்தி யுள்ளன.

மனதளவில் கடிவாளம் போட முடியாத இன்றைய தலைமுறை மனிதர்களிடையே, குறைந்தபட்சம் மானம் போய்விடக்கூடாது என்ற கடிவாளத்தை இந்த ‘மீ டூ’ போடும்.

அதேபோல கடந்த வாரம் முடிக்கும்போது இதுபோன்ற விஷயங்களை நீண்டகால முதலீடாக நம் குழந்தைகளிடம்தான் விதைக்க வேண்டும் என்று சொன் னேன். அதுக்கு என் வாழ்க்கையில் ஓர் அனுபவமும் இருக்கு என்றும் எழுதியிருந்தேன்.எனக்கும், என் 6 வயது மக னுக்கும் இடையே நடந்த நிகழ்வு தான் அது. என் பையனிடம் நான், ‘பெண்கள் நம் நாட்டின் கண்கள்’, ‘அறம் செய்ய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ இந்த மாதிரியான பொன் மொழிகள் எல்லாம் சொல்லிக் கொடுத்தது இல்லை. ஆனால், அவன் இந்த 6 வயதில் நான் வீட்டில் நிறைய முறை அழுததை பார்த்திருக்கிறான்.

என்னடா இப்படி?

நான் 9-ம் வகுப்பு படித்த நேரம். கிட்டத்தட்ட 2,000 பேர் கூடியிருந்த கலையரங்கம் அது. அங்கே நடந்த விநாடி - வினா போட்டியில் எங்கள் அணி 11-வது சுற்றுவரை முதலிடம் பிடித் தது. இறுதிச்சுற்றில் எங்களுக்கு பக்கத்தில் இருந்த அணியினர் வெற்றி பெற்றார்கள். அடுத்த

நொடியே என் கண்ணில் இருந்து திபு திபுவென கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. கதறி அழுதேன். அருகில் இருந்த சக மாணவர்கள் எல்லோரும், ‘‘என்னடா பாலாஜி இது? பொண்ணுங்க மாதிரி அழுதுகிட்டு...’’ என்று என் னைத் தேற்றினர்.

அதே மாதிரி, இப்போதும் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தால் சென்னை, கீழ்பாக்கத் தில் உள்ள ஒரு சர்ச்சுக்குப் போய் பிரேயர் பண்ணுவேன். கடவுளுக் கும், எனக்குமான அந்தத் தொடர்பு... பெரிய பலத்தைக் கொடுப்பதாக நினைப்பேன். அந் தச் சர்ச்சில் அப்போது என்னைச் சுற்றி 200 பேர் இருப்பார்கள். ஆனால், பிரேயர் பண்ணும்போது என் கண்ணில் இருந்து பொள பொளவென கண்ணீர் கொட்டும்.

அது என்னோட இயல்பு

மூணாவதாக, அப்போது எனக்கு பதினெட்டு, பத்தொன்பது வயது. கல்லூரி காலம். அரியர் சம்பந்தமாக வகுப்பு பேராசிரியர் திட்டினால் அடுத்த விநாடி அழுகை வந்துவிடும். இப்படி எனக்கு மனது வலித்தால் அழுகை வரும். உடம்பு வலித்தாலும் அழுகை வரும். அது என் இயல்பு.

கடந்த ஏப்ரல் மாதம் என் பைய னோட அந்த ஆண்டு வகுப்புகள் முடியும் நேரம். பெற்றோர் - ஆசி ரியர் மீட்டிங்குக்காக பள்ளிக்கு வரச் சொன்னார்கள். நானும் போயி ருந்தேன். அந்த ஆண்டு முழுக்க அவனது படிப்பு விஷயங்களைப் பற்றி சொன்னார்கள்.

ஒவ்வொன்றாக பகிர்ந்த என் பையனின் வகுப்பு ஆசிரியர், ‘‘இந்த வகுப்பில் ஏதாவது சின்ன விஷயங்களுக்காக சில நேரத்துல பசங்க அழுவாங்க. அவர்களில் பையன்கள் சிலர் அழும்போது சக பசங்க, ‘எதுக்குடா இப்போ பொண்ணு மாதிரி அழறே?’ன்னு சொல்லிட்டு சிரிப்பாங்க. பொதுவா ஒரு  பையன் அழுதால் இந்த மாதிரி சொல்றது வழக்கம்தான்.

யாருக்காக அழுதான்?

அப்படி ஒருமுறை ஒரு பையன் அழுதப்போ, உங்க பையன் மட் டும், ‘எங்கப்பாக் கூட இந்த மாதிரி வீட்டுல இருக்கும்போது அழு வார்’னு சொன்னான். அதை கேட்டு அங்கே இருந்த மொத்த பசங்களும் சிரித்தனர். ‘யாருக்கு வலித் தாலும் அழலாம். பொண்ணுங்க தான் அழணும்னு இல்லை!’ன்னு மீண்டும் சொன்னான்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அதே மாதிரி இன்னொரு பையன் அழும்போது, அதை பார்த்த உங் கள் மகன், ‘எங்க வீட்லயும் எப்ப யாச்சும் எங்க அப்பா அழு வாங்க!’ன்னு சொன்னான். அதன் பிறகு இன்னொரு சமயத்துல ‘எங்க அப்பாக்கூட சமீபத்துல அழுதார்!’ன்னு உங்க மகன் சொன்னான். இப்போ இந்த ஆண்டு முடிவுல இந்த வகுப்பில் படிக்கும் 22 பசங்களுக்கும் பொண்ணுங்கன்னு இல்லை. யாருக்கு அழுகை வந்தாலும் அழுவாங்க என்பது ஆழமாக மனதில் பதிந்தது. ஏன் எனக்கும் கூட!” - இப்படி அந்த ஆசிரியர் சொன்னார்.

மனசில் இருந்து தொடங்கு...

என் குழந்தைக்கு முன்னாடி அழணும்னு நினைத்து நான் அழவில்லை. என் இயல்பு அப்படி. அதை அவன் கவனித் திருக்கிறான். நான் நல்லா சமைப் பேன். என் சின்ன வயதில் தாத்தா சமைப்பதைப் பார்த்து வளர்ந்த தால் அது அப்படியே எனக்கும் ஒட்டிக்கொண்டது. அந்த மாதிரி, என் பையன் அடுத்த தலைமுறை யைச் சேர்ந்த 22 பேரோட மனநிலை மாற காரணமா இருந்திருக்கான்னு தெரிந்தபோது அவனை நினைத்து பெருமையாக இருந் தது.

முன்பே நான் சொன்ன விஷயம் தான். எனக்கு 2 பசங்க. அவங்க நாளைக்கு டாக்டரோ, பொறியாளர் களாகவோ ஆகணும்னு எனக்கு ஆசை இல்லை. நல்ல மனுஷங் கன்னு பெயர் எடுத்தால் போதும்.

இன்றைக்கு 6  வயசில் இருக் கும் பையன் மனசில் ஆணும் பெண்ணும் சமம் என்கிற சிந்த னையை பதிய வைக்கும்போது, நாளை    தன்னைச் சுற்றியிருக் கும் பெண்களுக்கு அவனே பாதுகாப்பா இருப்பான். பெண் களை மதிப்பான்.

அதுக்கான விதையை நான் என் குடும்பத்திலேயே விதைத் திருப்பதாகவே நினைக்கிறேன்.

உங்கள் வீட்டிலும் இதுபோன்ற விதைகள் முளைத்து விருட்சமாக வளர வேண்டும். மீண்டும் அடுத்த வாரம் சந்திப் போம்.

- நிமிடங்கள் ஓடும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

56 secs ago

ஜோதிடம்

50 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்