தேவைப்பட்டால் சசிகலாவையும் எதிர்ப்பேன்: திவாகரன் பேட்டி

By கரு.முத்து

ஜெ

யலலிதா இருந்தபோது அதிமுக-வின் நிழல் பிம்பமாக இருந்த சசிகலா குடும்பம் இப்போது கலகலத்துக்கிடக்கிறது. மாமன் - மருமகன் சண்டை உச்சத்தைத் தொட்டு சந்திக்கு வந்திருக்கிறது. திவாகரன் - தினகரன் தரப்பினர் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் அறிக்கைகளில் பாஸ்பரஸ் பற்றி எரிகிறது. முன்பு, அடையாறில் உள்ள சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் இல்லத்தின் வாசலில் தவம் கிடந்த மீடியாக்கள், இப்போது (மன்னார்குடி அருகே) சுந்தரக்கோட்டையிலுள்ள சசிகலாவின் தம்பி திவாகரனின் பண்ணை வீட்டைச் சுற்றிவருகின்றன.

உங்களுக்கும் தினகரனுக்கும் என்னதான் பிரச்சினை?

யாராவது ஏதாவது ஃபேஸ்புக்ல, வாட்ஸ்அப்ல போட்டா, அதை என் பையன்தான் போடறான்னு நினைச்சிக்கிறாங்க. தினகரனைப் பார்க்கப் போறவங்ககிட்ட வீட்டு வாசல்ல நிற்கிற டிரைவர்கூட பணம் கேட்கிறாரு, இப்படிப் பாதிக்கப்பட்டவங்க யாராவது மீம்ஸ் போட்டிருந்தா, அதுக்கு நாங்களா பொறுப்பு? கட்சியில சேர ஆளு அனுப்புனா, அவங்கள அவமானப்படுத்தி அனுப்புறாங்க. எங்க மேல ஏதாச்சும் சந்தேகம் இருந்தா, ‘என்ன திவாகரா, இப்படிப் பிரச்சினை ஓடுது… அதைக் கொஞ்சம் பார்த்துக்க’னு கேட்டிருக்கலாம். அதை விட்டுட்டு, ‘முதல்வர் பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக திவாகரன் குரூப் வேலைசெய்கிறது’ன்னு வெற்றிவேலை விட்டு ஃபேஸ்புக்கில் போடச் சொல்றது என்ன நியாயம்? அவர் யாரு எங்களைப் பற்றிப் பேச? அமைதியா இருக்கிற எங்க அடிமடியிலேயே கைய வெச்சா சும்மா இருக்க முடியுமா? சொல்லுங்க.

உங்க அக்கா சசிகலாவை மீட்க எடப்பாடி தரப்போடு நீங்கள் நெருங்குவதாகவும், அவர்கள் மூலமாகப் பிரதமரிடம் பேசப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?

எங்க அக்காவை மீட்க நான் யார் காலிலும் விழத் தயார்.

அப்படி என்றால் எடப்பாடி தரப்பிடம் நெருங்குவது உண்மைதானா?

உடனே அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. அதிமுக, திமுக இவர்கள் பக்கம் நிச்சயம் போக மாட்டேன். அம்மா அணி எனத் தனியாகத்தான் செயல்படுவேன்.

இப்போது நடக்கும் விஷயங்கள் எல்லாம் சசிகலாவுக்குத் தெரியுமா?

உண்மை என்னன்னு அவங்களுக்குத் தெரியாது. ஏன்னா, இந்தக் கோஷ்டி அவங்களை கைப்பாவையாக்கி வெச்சிருக்காங்க. ஜெயிலுக்கு இவனுங்களே தினகரனை ‘இந்திரன், சந்திரன், ஆகா ஓகோ’ன்னு துதிபாடி லெட்டர் எழுதிப் போடறானுங்க. இப்படி இருந்தா, எப்படி அவங்களுக்கு உண்மை தெரியும்?

சரி, உண்மை தெரிந்தால் சசிகலா உங்கள் இருவரில் யாரை ஆதரிப்பார்?

உண்மையை உணர்ந்துகொண்டால் என்னைத்தான் ஆதரிப்பார். ஆனால், அவங்க நூல் இவனுங்க கையில் இருக்கு. பொம்மையா ஆட்டி வைக்கிறாங்க. ஜெயில்ல இருந்த டிவி-யைக்கூட எடுக்க வெச்சுட்டாங்க. வெளி உலகத் தொடர்பே இல்லாம அக்காவை வெச்சிருக்காங்க. அக்கா வெளியே வந்த பின்பும் உண்மையை உணரவில்லை என்றால்... தேவைப்பட்டால், அக்காவையும் எதிர்ப்பேன். அவங்களுக்கு எதிராவும் அரசியல் நடத்தித்தான் ஆகணும்.

(இன்னும் ஏராளமான கேள்விகள்...

முழு பேட்டியும் படிக்க...

‘காமதேனு’!)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்