அரசியல் வரலாற்று உரைகள்

By ஸர்மிளா ஸெய்யித்

முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற செயல் பாட்டாளர் பஷீர் சேகுதாவூதின் நாடாளுமன்ற உரைகள் ‘சோர்விலாச் சொல்’ என்ற தொகுப்பாக வெளி வந்துள்ளது.

அவரது சமூகம்; அறம் சார்ந்த அணுகுமுறை; சமூக, அரசியல் நோக்கில் நாட்டின் எதிர்காலம் குறித்த புரிதல்; இயங்குதளம், ஒரு இஸ்லாமியராக அவர் எதிர்கொண்ட மானிடச் சிக்கல்கள் என்பவற்றின் சான்றாக இவை உள்ளன.

இன்றுவரை அறியப்பட்டிருந்த பஷீரின் ஆளுமையின் பன்முகத்தன்மையைச் சோர்விலாச்சொல் வெளிச்சமிட்டுக்காட்டுகிறது. முஸ்லிம்கள்மீது படிந்த வரலாற்றுக் கரையை வெளிப்படுத்துகிற, திரைமறைவிலான முஸ்லிம் களுக்கு எதிரான அநீதிகளை அம்பலப்படுத்துகிற உரைகள் ஒப்புதல் வாக்காகச் சோர்விலாச்சொல்லின் பக்கங்கள் முழுவதும் இழை யோடியுள்ளன. பஷீர் புலிகளை மட்டும் விமர்சிக்கவில்லை. நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் இருந்துகொண்டு அரசையே குற்றம் சொல்லியிருக்கிறார்.

எழுச்சிமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்கான தேவை இருப்பதை உணர்ந்தவராகப் பல இடங்களில் உரையாற்றியுள்ளார். தீவிரவாதப் பூச்சு இலங்கை முஸ்லிம் இளைஞர்களைப் பற்றிக்கொள்ளும் அபாயத்திலிருந்து காப்பாற்றும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும், ஆயுத தாரிகளுக்கும் இருப்பதாக 2003-ம் ஆண்டிலேயே பஷீர் கூறியுள்ளார். இதைத் தடுப்பதற்குரிய ஒரே வழி முஸ்லிம்களின் தலைவிதியை முஸ்லிம்களே எழுதும் வாய்ப்பை மறுக்காமல் இருப்பதே என்ற அவரது ஆணித்தரமான அறிவிப்பு பரிசீலிக்கத்தக்கது.

இலங்கையில் முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்ட இனக் குழுவாக இருப்பதிலுள்ள ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான மாற்று யோசனைகளை அல்லது இணங்கிச் செல்வதற்கான தந்திரோபாய அரசியல் வழிமுறைகளை அறிந்த ஒருவரா கவே ‘சோர்விலாச்சொல்’ பஷீரை அடையாளப்படுத்துகிறது.

ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டோரின் பின்புலங்களை, உளவியல்பை, சமூகத்தின் சிடுக்குப் போக்குகளை விளங்கியவராக, தேசியம், மதவாதம், இனம், மொழி, தொழில், பண்பாடு, பெருமை என்ற அனைத்துத் தளங் களிலும் விவாதிக்கத் தயாரான அறிவியல் தன்மையைப் பஷீரின் சோர்விலாச்சொல் உரைகளில் காணமுடிகிறது.

இந்நூலைப் படித்தபின் இலங்கை அரசியல் வரலாற்றையும் இலங்கைச் சமூக உளவியலையும் புரிந்து கொள்வதில் ஒரு தெளிவு கிடைக்கிறது. இந்த உரைகள் ஒரு நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகளைத் தமக்குள் கொண்டிருக்கும் ஒரு தனியனின் பல்வேறு குறியீடுகளால் நிரம்பிய கருத்துகள், வாதங்கள். இவை அடிப்படைகள் பற்றிய மாறுபட்ட பார்வைகளுடன் அரசியல் பாடம் புகட்டுகின்றன.

சோர்விலாச்சொல் - பாராளுமன்ற உரைகள் 1991-2011

பசீர் சேகுதாவூத்

விளிம்பு, 1205 கருப்பூர் சாலை

புத்தாநத்தம்- 621310

தொலைபேசி: 04332 273444

விலை: ரூ. 250

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

8 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்