உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

By செய்திப்பிரிவு

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
வு மிங் - யி
தமிழில்: யுவன் சந்திரசேகர்
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ. 395

ஓவியம்: தேடல்கள், புரிதல்கள்
கணபதி சுப்பிரமணியம்
யாவரும் வெளியீடு
விலை: ரூ.350

இந்தியா ஏமாற்றப்படுகிறது
தொகுப்பு: பிரதீக் சின்ஹா, சுமையா ஷேக், அர்ஜுன் சித்தார்த்
தமிழில்: இ.பா.சிந்தன்
எதிர் வெளியீடு
விலை: ரூ.320

அயல் பெண்களின் கதைகள்
சிங்களத்திலிருந்து தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்
வம்சி வெளியீடு
விலை: ரூ.160

பெரியார்-அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு (தொகுப்பு) கி.வீரமணி
விலை ரூ. 220
திராவிடர் கழக வெளியீடு

ஆஹா!

உலகத் தமிழ்க் களஞ்சியம்
(3 தொகுதிகள்)
உமா பதிப்பக வெளியீடு
விலை: ரூ.3,000
98410 68832

தமிழ், தமிழர்களை முதன்மைப்படுத்தி தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம், ஆளுமை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் கலைக்களஞ்சியம் இது. 900 இலக்கணக் குறிப்புகள், 700 தாவரங்களைப் பற்றிய குறிப்புகள், 100 ஆறுகளைப் பற்றிய விவரங்கள், 800 இதழ்களைப் பற்றிய குறிப்புகள் என 39 பிரிவுகளில் 16,000-க்கும் மேற்பட்ட செய்திகளை உள்ளடக்கியிருக்கும் இந்நூல் 2,500 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது.

பளிச்!

புத்துயிர்ப்பு
லியோ டால்ஸ்டாய்
விலை: ரூ.395
என் சரித்திரம்
உ.வே.சாமிநாதையர்
விலை: ரூ.400
அடையாளம் வெளியீடு
04332-273444

டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்றான ‘புத்துயிர்ப்பு’ நாவல், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தன்வரலாற்று நூலான ‘என் சரித்திரம்’ என இரண்டு முக்கியமான புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது ‘அடையாளம்’ பதிப்பகம். விலை குறைவு என்பதற்காகத் தயாரிப்பில் ஏதும் சமரசம் இல்லை. சுமார் 800 பக்கங்கள் கொண்ட இரண்டு புத்தகங்களுக்கும் தலா ரூ.400 என்பதாக விலை நிர்ணயித்திருக்கிறார்கள்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

மஸ்னவி
ஜலாலுத்தீன் ரூமி
தமிழில்: நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம்
மொத்த விலை: ரூ. 3,700 (7 தொகுதிகள்)
ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் வெளியீடு
98415 67213

உலகின் கவிதைப் பேரிலக்கியங்களுள் பாரசீக சூஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமியின் ‘மஸ்னவி’யும் ஒன்று. 27,000 வரிகளில் ஆறு பாகங்களாக வெளியான கவிதைப் பொக்கிஷம் இது. கி.பி. 1258-ல் எழுதத் தொடங்கி 1273-ம் ஆண்டு தனது மரணம் வரை எழுதிய நூல் ‘மஸ்னவி’. இந்த நூலை ஏழு தொகுதிகளாக நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம் மொழிபெயர்த்திருக்கிறார். ரூமியின் ‘மஸ்னவி’ பெருந்தொகுப்பு தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய முயற்சி!

நம் வெளியீடு

என்றும் காந்தி
ஆசை
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.250

அரங்கு எண்: 133 & 134

சென்னைப் புத்தகக்காட்சியில் சூடாக விற்பனையாகும் புத்தகங்களுள் ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ நூலும் ஒன்று. காந்தியின் 150-வது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் விதமாக வெளிவந்த இந்தப் புத்தகம் அனைத்துத் தரப்பினரும் காந்தியை அறிந்துகொள்ளும் பொருட்டு எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல். காந்திக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

28 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்