உங்களிடம் இருக்கின்றனவா இந்நூல்கள்?

By செய்திப்பிரிவு

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?
விடுதலை இராசேந்திரன்
நிமிர்வோம் வெளியீடு
விலை: ரூ.120

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
சசி தரூர்
தமிழில்: சத்யானந்தன்
கிழக்கு வெளியீடு
விலை: ரூ.350

பௌத்த வரலாற்றில் காஞ்சீவரம்
ஏழுமலை.கலைக்கோவன்
நீலம் வெளியீடு
விலை: ரூ.180

முதல் பெண்கள்
நிவேதிதா லூயிஸ்
மைத்ரி வெளியீடு
விலை: ரூ.200

குழந்தைகள் கலைக்களஞ்சியம்
10 தொகுதிகள்
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு
மொத்த விலை: ரூ.840

ஆஹா!

வாழும் மூதாதையர்கள்
அ.பகத்சிங்
உயிர் பதிப்பகம்
விலை: ரூ.600
தொடர்புக்கு: 90929 01393

இருளர்கள், காடர்கள், தோடர்கள் உள்ளிட்ட 13 தமிழகப் பழங்குடிகளின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலை, இலக்கியம், சடங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் விரிவாகப் பேசும் நூல் இது. கதை பேசும் வண்ணப் படங்களுடன் வெளியாகியிருக்கும் இந்தப் புத்தகம் நல்ல ஆவணம்.

பளிச்!

உயிர்மை வெளியீடு, மொத்த விலை: ரூ.480
தொடர்புக்கு: 044–48586727

மனநல மருத்துவரும் எழுத்தாளருமான சிவபாலன் இளங்கோவன் நான்கு புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார். குழந்தை வளர்ப்பு தொடர்பான ‘நம் காலத்தின் குழந்தைகள்’, மருத்துவத் துறையின் கடந்த காலம், இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகள், எதிர்காலத் திட்டங்களைப் பேசும் ‘மருத்துவம்: நேற்று, இன்று, நாளை’, மனரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள உதவும் ‘எனக்குள் என்ன நடக்கிறது?’, சமூகப் பிரச்சினைகள் எவ்வாறு ஒரு தனிநபரைப் பாதிக்கிறது என்பதை விவாதிக்கும் ‘மனம், மனிதன், சமூகம்’.

உங்களிடம் இருக்கின்றனவா இந்நூல்கள்?

தமிழ் அறிவோம்
மகுடேசுவரன்
தமிழினி வெளியீடு
மொத்த விலை: ரூ.765 (7 நூல்கள்)
தொடர்புக்கு: 86672 55103

ஒரு சொல் கேளீர்!
அரவிந்தன்
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ.225
தொடர்புக்கு: 96777 78863

தமிழ் இலக்கணத்தை மிக எளிமையாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு ‘தமிழ் அறிவோம்’ என்ற தலைப்பில் தொடர் புத்தக வரிசையைக் கொண்டுவருகிறார் மகுடேசுவரன். தமிழ் இலக்கண அடிப்படைகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வரப்பிரசாதம். தமிழைக் கோளாறு இல்லாமல் பிழை தவிர்த்துப் பயன்படுத்த வழிசொல்கிறது அரவிந்தன் எழுதிய ‘ஒரு சொல் கேளீர்!’. உரைநடைக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் பயன்படும்.

நம் வெளியீடு

இந்தியா என்றால் என்ன?
மருதன்
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.90
அரங்கு எண்: 133 & 134

டால்ஸ்டாய், காந்தி, தாகூர், ஏங்கெல்ஸ், அம்பேத்கர், ரொமீலா தாப்பர் என்று இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. இளம் வாசகர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம்தான் என்றாலும் ஆசிரியர்கள், பெரியவர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்குமான புத்தகமும்கூட.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

25 mins ago

வாழ்வியல்

16 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்