நூல்நோக்கு: அச்சுறுத்தும் அலர்ஜி

By செய்திப்பிரிவு

அச்சுறுத்தும் அலர்ஜி

அலர்ஜி
கு.கணேசன்
கிழக்குப் பதிப்பகம்
ராயப்பேட்டை,
சென்னை-14.
விலை: ரூ.140
044 4200 9603

‘சூரியனுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளும், எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்’ என்பது பொதுவான மருத்துவ விதி. ஆனால், நடைமுறையில் எவற்றால், எப்போது, எப்படி அலர்ஜி ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், முன்னெச்சரிக்கையுடன் பெரும்பாலான நோய்களைக் கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும். அலர்ஜி நோய்களின் கொடிய முகத்தை அவற்றை அனுபவித்தவர்கள்தான் அறிவார்கள். குறிப்பாக, பனியிலும் குளிரிலும் மழையிலும் ஆஸ்துமா வந்து அலறுபவர்கள் அநேகம் பேர். ‘எக்சீமா’ எனும் தோல் அழற்சி நோயால் உடலெங்கும் அரிப்பு எடுக்கத் தொடங்கினால் சொறிந்து முடியாது. இப்படி எத்தனையோ துயரங்கள். நம்மை அச்சுறுத்தும் அலர்ஜிகள் குறித்துத் தெரிந்துகொள்ளவும் தெளிவடையவும் ஒரு மருத்துவ வழிகாட்டியாக இருக்கிறது இந்நூல்.
- சிவசு

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரமில்லை

கொடி வழி வந்த உறவு
அ.ரசித்கான்
நூர்ஜஹான் பதிப்பகம்
ராயப்பேட்டை, சென்னை -14.
விலை: ரூ.400
90809 13636

தமிழக இஸ்லாமியர்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் உள்ள நெருக்கமான உறவை விரிவாகப் பேசும் நூல் இது. அண்ணாவுக்கும் காயிதே மில்லத்துக்கும் உள்ள உறவில் தொடங்கி, இன்றைய காலகட்டம் வரையிலான வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது. திராவிடக் கொள்கைகளில் கூடுதல் பற்றுக்கொண்டிருந்தாலும் திராவிடப் பற்றாளர்களும், இறை நம்பிக்கை கொண்ட இஸ்லாமியர்களும் இணைந்து, மத நல்லிணக்கத்துக்கு நல்லெண்ணப் பாதை போட்டிருப்பதைத் துல்லியமாக நூலாசிரியர் இதில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திமுக கொள்கைகளில் இளமையிலேயே கவரப்பட்டு, கழகச் செயல்பாடுகளில் ஈடுபட்ட பல இஸ்லாமியர்களின் வாழ்க்கைக் குறிப்பும் இதில் உள்ளது. சிறுபான்மைச் சமூகத்துக்கும் பெரும்பான்மைச் சமூகத்துக்குமான அரவணைப்பைத் தமிழக இஸ்லாமியர்களும் திராவிட இயக்கப் பற்றாளர்களும் எவ்வளவு நேர்மையுடன் பின்பற்றினார்கள் என்பதை இந்நூல் அழகுறப் பதிவுசெய்கிறது.
- மானா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

27 mins ago

சுற்றுச்சூழல்

59 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

57 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்