‘இந்து லிட்’ இலக்கிய விழா சென்னையில் நாளை துவக்கம்

By செய்திப்பிரிவு

‘இந்து லிட்’ இலக்கிய விழா, சென்னையில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ‘லிட்டரரி ரிவ்யூ’ பகுதியின் 20-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக 2010-ம் ஆண்டில் இலக்கிய விழா நடத்தப்பட்டது. அதுமுதல் ஆண்டுதோறும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டுக்கான ‘இந்து லிட்’ இலக்கிய விழா, சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த 3 நாட்களும் தேசிய மற்றும் சர்வதேச நூல் ஆசிரியர்கள், வல்லுநர்கள், கருத்தி யலாளர்களின் சொற் பொழிவுகள், குழு விவாதங்கள், பயிலரங்கம் ஆகியவை நடைபெறும்.

இந்நிகழ்வின்போது, இலக்கிய ஆர்வலர்கள் மேன் புக்கர் விருது பெற்ற அரவிந்த் அடிகா மற்றும் இலக்கிய முகவர் டேவிட் காட்வின் ஆகியோருடன் பார்வையாளர்கள் உரையாடலாம். சிறந்த எழுத் தாளர்களான அஸ்வின் சாங்கி, ரவி சுப்பிரமணியன், அனிதா நாயர், நரேஷ் பெர்னாண்டஸ் ஆகியோரும் சிறப்புரையாற்று கின்றனர். ரோமிலா தாபர், வில்லி யம் டேல்ரிம்பிள் ஆகியோரின் சொற்பொழிவுகளை வரலாற்று ஆர்வலர்கள் கேட்கலாம்.

‘21-ம் நூற்றாண்டில் பெண் கள்’ என்ற தலைப்பில் பர்கா தத் உரையாற்றுகிறார். நவீன இந்தியப் பெண்கள் குறித்து எழுத்தாளர்கள் மாமங் தாய், நந்தினி கிருஷ்ணன், ஐரா திரிவேதி, மாதுரி பேனர்ஜி, நவோமி உல்ப் ஆகியோர் பேசுகின்றனர். ‘அரசியலில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் கவிஞர் சல்மா, சுகிர்தராணி, ஷர்மிளா செய்யது, அனார் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர்.

கவிஞர்களுக்கு இரண்டு அமர்வு நடக்கிறது. முதல் அமர்வு எழுத்தாளர் பாவன் கே.வர்மா வுடனும், அடுத்த அமர்வு அவரது ஆசிரியர் சாந்தனு ரே சவுத்ரியுடனும் நடக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கான அமர்வில் அனிதா ரத்னம், ரேவதி குமார், பி.சி.ராமகிருஷ்ணன், ஆர்.ரோகிணி, சுசீலா ரவீந்திரநாத், கே.ஆர்.ஆறுமுகம் பங்கேற்கின்றனர்.

இலக்கிய விழாவின் 2-ம் நாளில், கர்நாடக இசையின் பரி ணாம வளர்ச்சி குறித்து டி.எம்.கிருஷ்ணா, கோபாலகிருஷ்ண காந்தி கலந்தாலோசனை செய்கின் றனர். 3-ம் நாள், கமல்ஹாசன், கே.ஹரிஹரன் ஆகியோர் இந்திய சினிமா பற்றி விவாதிக்கின்றனர்.

இலக்கிய விழாவின் கலந்துரை யாடல்கள், சொற்பொழிவு களுக்கு இடையே ராதா தாஸ் பேண்ட் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

பயிலரங்கத்தில், பாயல் கித்வானியின் யோகா நிகழ்வு நடக்கிறது. திரைக்கதை எழுது வது பற்றி சப்ரினா தவான் சொல்லித் தருகிறார். நடனம் பற்றி அனிதா ரத்னமும், வாழ்க்கை வரலாறு எழுதுவது பற்றி ஏ.ஆர்.வெங்கடாஜலபதியும் பேசுகின்றனர். குழந்தைகளுக்கு கதை சொல்வது மற்றும் நாடக அரங்கம் பற்றி விக்ரம் தர் பேசுகிறார்.

இலக்கிய விழா நிகழ்வுகளை எம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் உடனுக்குடன் www.thehindu.com, www.thehindulfl.com ஆகிய இணையதளங்கள் மூலம் நேரடியாக பதிவு செய்கின்றனர். அத்துடன் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் பதிவேற்றம் செய்கின்றனர்.

புதினங்களுக்கான இந்து பரிசுப் போட்டியில் வி.ஐ.டி. பல்கலை, எஸ்.ஆர்.எம். பல்கலை, அண்ணா பல்கலை, எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

இலக்கிய விழாவுக்கு அனுமதி இலவசம். இலவச பாஸ் பெறுவதற்கு எல்எப்எல் என டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு, பெயர், வயது டைப் செய்து, 53030 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்