நூல் நோக்கு: 21-ம் நூற்றாண்டின் தாமிரபரணி

By செய்திப்பிரிவு

தாமிரபரணி மஹாத்மியம் என்னும் வடமொழி நூலில் உள்ளபடி தாமிரபரணிக் கரை ஆன்மிகத்தை விளக்குகிறது இந்நூல். சங்க நூல்களிலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்நதியில் 149 தீர்த்தக்கட்டங்கள் இருப்பது பிரமிப்பைத் தருகிறது. பஞ்சசபை செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், நவ கைலாயம், நவ சமுத்திரம் பற்றிய அரிதான தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது புஷ்கரம், 12 புஷ்கரங்களுக்கு ஒருமுறை நடப்பது மகா புஷ்கரம். மகா புஷ்கரம் இந்த ஆண்டு அக்டோபர் 12 முதல் 23 வரை நடந்தது. இப்புத்தகத்தில் உள்ள அனைத்துத் தகவல்களுக்கும் காணொளி வடிவம் கொடுத்திருப்பது புதிய முயற்சி.

- ஜூரி

நவீன தாமிரபரணி மஹாத்மியம்

முத்தாலங்குறிச்சி காமராசு

பொன் சொர்ணா பதிப்பகம்

செய்துங்கநல்லூர்-628809

விலை - ரூ.450

  04630-263043

அஃறிணை சொல்லும் கதைகள்

உயிரற்ற ஜடப்பொருட்களும் அஃறிணைகளும் இத்தொகுப்பின் கதைசொல்லிகளாக வலம்வருகிறார்கள். அவர்களின் கதையைச் சொல்வதன் மூலமாக மனித மனம், சமூக அவலம், மத நம்பிக்கைகளின் மீதான விமர்சனம், அரசியல், தத்துவம், நம்பிக்கை என முழுக்கவும் ஒன்றிலிருந்து வேறொன்றை உணர்ந்துகொள்வதான கதைசொல்லல் உத்தி. சீழ்பட்டுப்போன மனித மனதின், சமூகத்தின் அவலத்தையும் அபத்தத்தையும் அநேக கதைகளில் கேள்விக்குள்ளாக்குகிறார். அவை மனிதர்களின் குரலாக அல்லாமல் வேறொன்றின் குரலாக ஒலிப்பதே இத்தொகுப்பின் தனித்துவம். நண்பகல் வேளையில் பறவைக் கூட்டத்தால் இருள் சூழ்ந்தது என்பது போன்ற பல்வேறு சித்திரங்களும் மாயத் தருணங்களும் ஒவ்வொரு கதைகளிலும் விரவிக்கிடக்கின்றன. சிறிய பக்க அளவிலான இக்கதைகளின் தொகுப்பு புதுமையான வாசிப்பனுவத்துக்குக் கூட்டிச்செல்கிறது.

- ரா.பாரதி

கடந்தை கூடும் கேயாஸ் தியரியும்

சிவசங்கர் எஸ்.ஜே

என்சிபிஹெச் வெளியீடு

அம்பத்தூர்,

சென்னை-98.

விலை: ரூ.50

 044–26251968

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்