நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளிவந்த ‘சிலம்புச் செல்வி’

By செய்திப்பிரிவு

எழுதி கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்கள் நெருங்கும் நிலையில், தன்னுடைய கையெழுத்துப் பிரதியை அச்சு நூலாக்கியிருக்கிறார் கவிஞர் இரா.நக்கீரன். நூறு பக்கப் புத்தகத்துக்குள் ‘சிலம்புச் செல்வி’ எனும் சிலப்பதிகார நாடகத்தை உள்ளடக்கியிருக்கிறார். “நூலாக்கம் பெறுவதுதான் இப்போதே தவிர, அந்தக் காலத்தில் பல முறை மேடை ஏற்றப்பட்ட நாடகம் இது. ஆனால், புத்தகம் என்ற வடிவத்துக்கு ஒரு பிரதியைக் கொண்டுசெல்ல ஒரு காத்திருப்பு அவசியமாகிறது. இந்த நாடகம் அப்படிப் பல ஆண்டுகளை எடுத்துக்கொண்டுவிட்டது” என்று சொல்லும் நக்கீரன் பல்வேறு விஷயங்கள் தொடர்பில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருப்பவர். எண்பது வயதைக் கடந்துவிட்ட நக்கீரன், “நாம் எழுதுகையில் ஒவ்வொரு நாளும் உடலிலிருந்து வயது உதிர்ந்துவிடுகிறது” என்கிறார். அடுத்து, சொந்த ஊரான வேலூரைப் பற்றி ஒரு நூல் எழுதும் யோசனையில் இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

13 mins ago

தமிழகம்

23 mins ago

இணைப்பிதழ்கள்

40 mins ago

இணைப்பிதழ்கள்

51 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்