நீங்களும் வாசியுங்களேன்: இந்தியப் பொருளாதாரத்தின் அடுத்த 25 ஆண்டுகள்

By இராம.சீனுவாசன்

நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் குன்னர் மிர்தால் எழுதிய ‘ஆசிய நாடகம்’ புத்தகத்தின் 50 ஆண்டு நிறைவை ஒட்டி, இந்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு எழுதிய இக்கட்டுரை, கடந்த மாதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இந்தியாவின் 50 ஆண்டு (1968-2018) அரசியல்-பொருளாதார மாற்றங்களைப் பல அரிய தரவுகளுடன் அலசுகிறது. குறிப்பாக, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எடுக்க வேண்டிய பொருளாதாரக் கொள்கை முடிவுகளை ஆலோசிக்கிறது. இந்திய தேசிய உற்பத்தியில் சிறிய அளவே பங்கு வகிக்கும் வேளாண் துறையானது வேலைவாய்ப்பு, பணவீக்கம், சமூக நலன் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரும் காரணியாக இருப்பதால், இத்துறையின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றால், மிகப் பெரிய நாடுகள்கூட அழிந்துள்ளன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதற்குள் விழித்துக்கொள்ள வேண்டும். உலகில் தொழில்புரட்சியைத் தொடர்ந்து பல அரசியல்-பொருளாதார ஒழுங்குமுறையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அதுபோல் மீண்டும் ஒரு ஒழுங்குமுறை வடிவமைப்பு இப்போது அவசியமாகிறது.

Kaushik Basu,  'A Short History of India’s Economy –

October 2018 WIDER working paper 2018/124'

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

கருத்துப் பேழை

2 mins ago

சுற்றுலா

39 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்