தொடுகறி: கவிஞர்களின் பார்வையில் சிவாஜி!

By செய்திப்பிரிவு

ஆங்கிலத்துக்குப் போகும் நம்மவர்கள்!

தமிழ்ச் சூழலில் ஒரு நல்ல மாற்றம் நடக்கிறது. ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புகள் வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக நனவாகிறது. ஆ.மாதவன், சூடாமணி, அ.முத்துலிங்கம், ஜோ.டி.குரூஸ் ஆகியோரின் படைப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. நான்கில் மூன்று நூல்கள் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் முன்முயற்சியில் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா போன ‘அந்தரப் பூ’

கல்யாண்ஜியின் 15-வது கவிதை நூல் ‘அந்தரப் பூ’. இந்த நூலை ‘சந்தியா பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதினைப் பெறுவதற்காக டொரான்டோ சென்றிருக்கும் கல்யாண்ஜியோடு கூடவே சென்றிருக்கிறது ‘அந்தரப் பூ’.

தமிழ்ப்பேராய விருது கால நீட்டிப்பு!

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ்ப் பேராயம்’ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான விண்ணப்பக் கெடு ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. விண்ணபிக்க வேண்டிய முகவரி: “செயலர், தமிழ்ப்பேராயம், எண் 518, ஐந்தாம் தளம், பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடம், எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழக நிறுவனம், காட்டாங்குளத்தூர் - 603 203. தொடர்புக்கு: 044-27417379.

பண்டிதரை வாசித்தல்!

8132596c4385191mrjpg100 

அயோத்திதாசரின் எழுத்துகள் தொகுக்கப்பட்டு இருபதாண்டுகள் நெருங்கும் நிலையில், ‘பண்டிதரைப் பயிலுதல்’ என்ற பயிலரங்கு திருவண்ணாமலையில் நடந்தது. பண்டிதரின் எழுத்துகளை வாய்விட்டு ஒருவர் வாசிக்க, கூட்டத் தில் உள்ள ஏனையோர் கேட்பதும், வாசிப்பு முடிந்த பின் அவரவர் பார்வைகளைப் பகிர்ந்துகொள்வதும் என நடந்த இந்நிகழ்ச்சி மூத்தோரை நினைவுகூரவும் வாசிக்கவுமான ஒரு நல்ல உதாரணம் என்று சொல்லலாம்.

நட்சத்திரமாகும் ஷோபாசக்தி!

பிரெஞ்சு இயக்குநர் கரோலின் சூவுடன் எழுத்தாளர் ஷோபாசக்தி நிற்கும் புகைப்படம் முகநூலைக் கலக்கியது. இலக்கிய உலகைக் காட்டிலும் சீக்கிரமே திரை யுலகில் பிரமுகராகிவிடுவார்போல ஷோபாசக்தி!

கவிஞர்களின் பார்வையில் சிவாஜி!

சிவாஜியின் 90-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, ‘கவிஞர்களின் பார்வை யில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்’ எனும் நூலைத் தொகுத்துள்ளார் சோலை தமிழினியன். 136 கவிஞர்களின் சிவாஜி பற்றிய பதிவு கள் இந்நூலில் உள்ளன. ஜூன் 10 அன்று எஸ்.பி.முத்துராமன் நூலை வெளியிடவுள்ளார்.

தொகுப்பு:மு.முருகேஷ் , த.ராஜன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்