பூங்காவில் ஓவிய விழா

By செய்திப்பிரிவு

விய விழா-2018. சென்னையில் கடந்த 2016-ல் ஒருநாள் நிகழ்வாகத் தொடங்கப்பட்ட ஓவிய விழா இப்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறது. திறந்த வெளி ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சியாக இந்த விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலாப்பூரிலுள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடக்கவுள்ளது. 75-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் நூற்றுக்கணக்கான படைப்புகள் பொதுமக்கள் கண்டுகளிப்பதற்காக இன்று பார்வைக்கு வைக்கப் படுகின்றன.

ஓவியங்களையும் சிற்பங்களையும் அனைவரும் அருகே அணுகி கண்டுகளிக்க ஒரு பொதுவெளியை உருவாக்கி, கலைஞர்களுக்கும் கலை ரசிகர்களுக்கும் இடையில் உரையாடலுக்காக ஒரு தளம் அமைத்துக் கொடுப்பது இந்த விழாவின் நோக்கம்.

காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இந்த விழா நடைபெறவிருக்கிறது. சிறுவர்களும் பங்கேற்பதால் இந்த நிகழ்வு கூடுதல் முக்கியத்துவம் கொண்டதாகிறது. ஓவியங்கள், சிற்பங்களின் விலை எல்லோராலும் வாங்கக்கூடிய அளவில் இருப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் குறைந்த விலையில் ஓவியங்களும் சிற்பங்களும் இந்தப் பூங்காவில் விற்கப்படுகின்றன. கலையை ஜனநாயகப்படுத்தும் இந்த நிகழ்வுக்குப் பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை அழைத்துவந்து ஆதரவு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்