இலக்கிய விருந்தின் மூன்றாம் நாள்!

By செய்திப்பிரிவு

‘தி

இந்து லிட் ஃபார் லைஃப்’ மூன்று நாள் இலக்கியக் கொண்டாட்டம் வரும் 14-ம் தேதி பொங்கல் அன்று தொடங்குகிறது. முதல் இரண்டு நாள் நிகழ்வுகள் குறித்து கடந்த இரண்டு நாட்களாகப் பார்த்தோம். இறுதி நாள் நிகழ்வுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

சர் முத்தா கான்சர்ட் ஹால், தி இந்து பெவிலியன், தி இந்து ஷோபிளேஸ் ஆகிய மூன்று அரங்குகளிலும் பல்வேறு அமர்வுகள் இடம்பெறவிருக்கின்றன. இணைய வம்பு (ட்ராலிங்) பற்றி அதனால் பாதிக்கப்பட்ட குர்மெஹர் கவுர், ஸ்வாதி சதுர்வேதி, டீஸ்டா செடல்வாட் ஆகியோருடன் நாராயண் லட்சுமண் உரையாடுகிறார்.

நடிகை ஹேமமாலினியைப் பற்றிய நூல் குறித்து ஹேமமாலினினியுடனும் நூலாசிரியர் ராம் கமல் முகர்ஜியுடனும் உரையாடுகிறார் சாந்தனு சௌத்ரி. கலை வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராமுடனும் ஆவணப்பட இயக்குநர் கோம்பை அன்வருடனும் உரையாடுகிறார் சித்ரா மாதவன்.

சிறார் படைப்புகளில் ‘பொலிட்டிக்கல் கரெக்ட்ன’ஸின் பங்கைப் பற்றிய உரையாடலில் அனுஷ்கா ரவிஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்தியாவைப் பற்றிய உரையாடலில் சார்லஸ் ஆலனும் ஆ.இரா.வேங்கடாசலபதியும் பங்குபெறுகிறார்கள். ஓவியம், கலை குறித்து டி.சனாதனனும் ஏ.எஸ்.பன்னீர்செல்வனும் உரையாடுகிறார்கள்.

இமையத்தின் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிய உரையாடலில் இமையமும் டாக்டர் ஆர்.அழகரசனும் பங்குபெறுகிறார்கள். ஆவணப்படங்கள் குறித்த உரையாடலில் கே.ஸ்டாலினும் ஆர்.வி.ரமணியும் பங்குபெறுகிறார்கள். இன்னும் கலை, இலக்கிய ஆளுமைகள் கலந்துகொள்ளும் பல்வேறு அமர்வுகள் இந்த விழாவில் இடம்பெறுகின்றன.

மூன்று நாளும் இந்திய இலக்கியத்தின் செழுமையும் கருத்துகளின் வீச்சையும் அள்ளிப் பருக வாசகர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழா குறித்த மேலதிகத் தகவல்களுக்கு www.thehindulfl.com என்ற இந்நிகழ்வின் பிரத்யேக இணையதளத்துக்குச் சென்று பார்க்கலாம்.

(நாளை…)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்