சிற்றிதழ் பார்வை: எழுதப்படும் மக்கள் வரலாறு

By செய்திப்பிரிவு

 

கா

விரி பொய்ப்பினும் அதன் கரைகளில் கலையும் இலக்கியமும் ரசனைகளும் இன்னும் பொய்த்துவிடவில்லை என்பதற்குச் சான்றாக, திருவாரூரிலிருந்து 2015 முதல் ‘பேசும் புதிய சக்தி’ மாத இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. தஞ்சை ப்ரகாஷின் நண்பர்களால் நடத்தப்படும் இந்த இதழ், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் சமகால இலக்கிய முயற்சிகளோடு அம்மண்ணின் வரலாற்றையும் தற்போது எதிர்கொண்டுவரும் சூழலியல் பிரச்சினைகளையும் தொடர்ந்து கவனப்படுத்திவருகிறது. நவம்பர் மாத இதழில், சி.ஏ. என்று அழைக்கப்படும் அறிவுறுவோனின் நேர்காணல் அந்த வகையில் குறிப்பிட்டத் தகுந்த வரலாற்றுப் பதிவு.

தனித்தமிழ் ஆர்வலராகப் பொதுவாழ்க்கையில் அடியெடுத்துவைத்த அறிவுறுவோன், பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து மேலத்தஞ்சையில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர், தமிழிசை விழாக்களை நடத்திய முன்னோடி, மேலத் தஞ்சையின் கையெழுத்திடப்பட்ட முதலாவது விவசா யக் கூலி உயர்வு ஒப்பந்தத்துக்குக் காரணமானவர்.

ஏவலாட்களின் அரிவாள் வெட்டையும், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டையும் எந்நேரத்திலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலையில்தான் விவசாயக் கூலி உயர்வு போராட்டங்கள் என்ற பெயரில் சாதி ஒழிப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன என்பதை விவரிக்கும் அவரது விரிவான நேர்காணல் தஞ்சை மாவட்டத்தின் மக்கள் வரலாறு. விவசாயப் போராட்டங்களை முன்னின்று நடத்திய என்.வெங்கடாச்சலத்தை ‘காணாப் பொணமாக'ப் பறிகொடுத்த துயர்மிகு வலியோடுதான் தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றிருக்கிறோம் என்பதை அடுத்தத் தலைமுறைக்கு அழுத்தமாக எடுத்துச்சொல்கிறது இந்த நேர்காணல்.

-புவி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்