எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: பொதுமக்கள் உட்பட 7 பேர் காயம்

By பிடிஐ

காஷ்மீரில் பாகிஸ்தான் துருப்புகளின் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டால் 2 பிஎஸ்எப் வீரர்கள் மற்றும், பொதுமக்கள் ஐவர் என 7 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை அன்று ஜம்மு, சம்பா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் எல்லை பகுதிகளிலும் அதனை ஒட்டிய குக்கிராமங்களிலும் நடந்துள்ளது.

சர்வதேச எல்லைப் பகுதியிலும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் பாகிஸ்தான் தொடர்ந்து ஊடுருவி, அத்துமீறிய தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆர்னியா, ஆர்எஸ் புரா மற்றும் ராம்கர் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை மாலை முதலே பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இதில் ஆர்எஸ் புரா பகுதியில் நடந்த தாக்குதலில்  பொதுமக்கள் மூவர் காயமடைந்துள்ளனர். ஆர்னியா பகுதி கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

சம்பா மாவட்டத்தின் ராம்கர் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பிஎஸ்எப் வீரர்கள் காயமடைந்தனர். பூஞ்ச் பகுதியில் நடந்த தாக்குதலில் 8 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். இதையடுத்து அப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பாகிஸ்தானிய துருப்புகளின் ஊடுருவல் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஆகஸ்ட் 1-ம் தேதி வரை 285 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே தேதி வரை பாக். 228 முறை தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்