உ.பி. யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

By பிடிஐ

உ.பி.மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள கதா கிராமத்தில் உள்ள யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் தினக்கூலிகள் என்பது பரிதாபத்துக்குரியது.

அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதால் ஆற்றில் கவிழ்ந்ததாகக் கூறப்படும் இந்த கோர விபத்தில் 25 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட 16 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

கிராமத்தினர் கூறும்போது, இவர்களனைவரும் தினக்கூலிகள் என்றும் கதா கிராமத்தில் படகில் இவர்கள் ஏறியுள்ளனர் ஹரியாணாவில் உள்ள சோனிபட்டிற்கு தினவேலைக்காகச் சென்றனர்.

இன்று காலை 8 மணிக்கு இந்த படகு கவிழ்ந்தது, உள்ளூர் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டதோடு வாகனங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்தே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஆதித்யநாத் நிவாரணம் அறிவிப்பு:

நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அளவுக்கதிகமாக படகில் ஆட்களை ஏற்றியது தொடர்பாக இந்த விசாரணை இருக்கும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்