போலி ஆதாரங்களுடன் சட்ட விரோதமாக தங்கி இருந்த 3 பாகிஸ்தானியர் பெங்களூருவில் கைது

By இரா.வினோத்

பெங்களூருவில் போலி ஆதாரங்களுடன் சட்ட விரோதமாக தங்கி இருந்த 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பிரவீட் சூட் நேற்று கூறியதாவது:

நேற்று முன்தினம் இரவு குமாரசாமி லே அவுட் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் வகை யில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட‌ 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக கைதானவர் களிடம் போலீஸார் விசாரித்த போது, முகமது ஷிஹாபா ( 32) என்பவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், சமீரா அப்துல் (28), காசீப் சம்சுதீன் (36), கிரண் குலாம் அலி (34) ஆகிய மூவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. முகமது ஷிஹாபா கத்தாரில் பணியாற்றியபோது சமீரா என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

சமீராவின் குடும்பத்தார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். இதையடுத்து சமீராவின் உறவினர்கள் காசீப் சம்சுதீன், கிரண் குலாம் அலி ஆகியோருடன் முகமது ஷிஹாபா, சமீரா ஆகியோர் கடந்த ஆண்டு நேபாளம் வழியாக சட்ட விரோதமாக‌ இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். சில மாதங்கள் பாட்னாவில் வசித்த இவர்கள், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள சிலர் பணம் வாங்கிக் கொண்டு பாகிஸ்தானை சேர்ந்த சமீரா, காசீப் சம்சுதீன், கிரண் குலாம் அலி ஆகியோருக்கு போலி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை தயாரித்து கொடுத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, இந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடக குற்றப் பிரிவு போலீஸார் கைதான பாகிஸ் தானியர்களிடம், தீவிரவாதிகளா? உளவு பார்க்க வந்தவர்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

50 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்