டிச. 30-க்கு பிறகு பழைய நோட்டு வைத்திருப்பவர்களுக்கு அபராதம்: அவசரச் சட்டம் பிறப்பிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செல்லாது என 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 30-ம் தேதிக்கு பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றிலும் 10 தாள்களுக்கு மேல் வைத்திருப்பது குற்றமாக கருதப்படும்.

இவ்வாறு வைத்திருப்பவர்க ளுக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் அல்லது வைத்திருக்கும் தொகையில் 5 மடங்கு இவற்றில் எது அதிகமோ அத்தொகை அபராதமாக விதிக்கப்படும் என கூறப்படுகிறது. வரும் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

டிசம்பர் 30-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த காலக்கெடு குறைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

18 mins ago

ஓடிடி களம்

11 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

54 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்