சூரத்தை சேர்ந்த பைனான்சியர் 700 பேரை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை மாற்றியது கண்டுபிடிப்பு: சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை

By செய்திப்பிரிவு

சூரத்தை சேர்ந்த பைனான்சியர், 700 பேர் மூலம் வங்கியில் பணம் டெபாசிட் செய்து மீண்டும் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பைனான்சியர் கிஷோர் பஜியாவாலா. ரகசிய தகவலின் அடிப்படையில் இவருடைய வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.10.45 கோடி பணம், நகைகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் 400 கோடிக்கு சொத் துகள் வைத்துள்ளதும் தெரிய வந்தது.

மேலும், பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு பிறகு 700 பேருடைய வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்ய வைத்துள்ளார். அதன் பிறகு சிறிது சிறிதாக அவர் களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை பெற்றுள்ளார். இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

வங்கிகளில் கிஷோர் 27 கணக்குகளை வைத்துள்ளார். அவற்றில் 20 வங்கி கணக்குகள் பினாமி பெயர்களில் உள்ளன. அந்த வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சம், 2 லட்சம், 4 லட்சம் என கறுப்புப் பணத்தை போட்டு மீண்டும் புதிய நோட்டுகளை பெற் றுள்ளார். இதுவரை அவர் எவ்வளவு டெபாசிட் செய்தார், எவ்வளவு எடுத்தார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

தங்கம், வைரம் பறிமுதல்

மேலும், சோதனையின் போது ரூ.1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாய் (எல்லாம் புதிய ரூபாய் நோட்டுகள்) பறி முதல் செய்யப்பட்டது. அத்துடன் 1,48,88,133 ரூபாய் மதிப்புள்ள தங்கம், 4,92,96,314 ரூபாய் மதிப் புள்ள தங்க நகைகள், 1,39,34,580 ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 77,81,800 ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1300 கோடி சொத்துமதிப்பு

கறுப்புப் பணத்தை வெள் ளையாக மாற்றுவதில் வங்கி அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்கள் கிஷோருக்கு உதவியிருப் பது தெரிய வந்துள்ளது. சூரத் மக்கள் கூட்டுறவு வங்கி மூத்த மேலாளர் பங்கஜ் பட்டுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.1.45 கோடி அளவுக்கு புதிய நோட்டுகளை, வங்கி அதிகாரிகள் துணை இல்லாமல் பெற்றிருக்க முடியாது. இதுகுறித்து மற்ற வங்கிகளுடைய கணக்குகளையும் ஆராய்ந்து வருகிறோம். கிஷோ ருடைய மொத்த சொத்த மதிப்பு 1,300 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது.

வட்டிக்கு கடன் வாங்குபவர்களின் வீடு, பிளாட், நிலம் போன்றவற்றின் பத்திரங்களை கிஷோர் அடமானமாக வாங்கி உள்ளார். கடனை திரும்ப செலுத்த முடியாமல் போனவர்களின் சொத்துகளை தன் பெயருக்கு மாற்றி உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவ்வாறு வருமான வரித் துறையினர் கூறினர்.

இந்த வழக்கு இப்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்