கறுப்புப் பண விவகாரத்தில் வங்கி அதிகாரி தற்கொலை

By செய்திப்பிரிவு

பெங்களூரு, விவேக் நகரை சேர்ந்தவர் ரவிராஜ் (55). இவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரில் அதிகாரியாக‌ பணியாற்றி வந்தார். மத்திய அரசின் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பிறகு, ரூ20 லட்சம் மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தார். இதற்காக ரவிராஜ் 20 சதவீத கமிஷன் பெற்றதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன் வங்கியில் சோதனை நடத்தினர். அதில் ரவிராஜ் சட்டவிரோத பணப் பரி மாற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக் கப்பட்டது. எனவே ரவிராஜை வங்கி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து ரவிராஜிடம் அமலாக்கத் துறை யினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனால் ரவிராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்த‌ ரவிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த விவேக் நகர் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

15 mins ago

சுற்றுச்சூழல்

25 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

20 mins ago

விளையாட்டு

41 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்