இந்தியாவின் புல்லட் ரயில் கனவு நிறைவேறும்: சதானந்த கவுடா

By செய்திப்பிரிவு

இந்தியாவின் 'புல்லட் ரயில்' கனவு நிறைவேறும் காலம் வந்துவிட்டதாக 2014- 2015 ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ஏற்கெனவே மும்பை - அகமதாபாத் மார்க்கத்தில் புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பலமுறை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. எனவே அந்த மார்க்கத்தில் முதலில் புல்லட் ரயில் இயக்கலாம் என்பது ரயில்வே அமைச்சகத்தின் யோசனை.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ரயில்வே துறை பல திட்டங்களை நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், பெருநகரங்களையும் - வளர்ச்சி மையங்களையும் இணைக்கும் வகையில் அதி வேக ரயில்கள் இயக்கப்படும். அதிவேக ரயில்களுக்கான 'வைர நாற்கர' திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புல்லட் ரயில்களுக்கு முற்றிலும் புதுமையான ரயில் இருப்புப்பாதை கட்டுமானம் தேவைப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே இருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தற்போதுள்ள நெட்வொர்க்கில் சிறு மாற்றங்கள் செய்தாலே போதுமானது.

எனவே, குறிப்பிட்ட சில மார்க்கங்களை தேர்ந்தெடுத்துள்ளோம். அந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் வேகத்தை மணிக்கு 160 கி.மீ இருந்து 200 கி.மீ வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கங்கள்

  1. டெல்லி - ஆக்ரா
  2. டெல்லி - சண்டிகார்
  3. டெல்லி - கான்பூர்
  4. நாக்பூர் - பிலாஸ்பூர்
  5. மைசூர் - பெங்களூர் - சென்னை
  6. மும்பை - கோவா
  7. மும்பை - அகமதாபாத்
  8. சென்னை - ஹைதராபாத்
  9. நாக்பூர் - செகுந்தராபாத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்