500, 1000 ரூபாய் நோட்டுகள் விவகாரம்: குடியரசுத் தலைவர் பிரணாப்பிடம் முதல்வர் மம்தா பானர்ஜி புகார்

By பிடிஐ

நாட்டில் உயர் மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது, பொருளாதார எமர்ஜென்சியை கொண்டு வந்தது போல் உள்ளது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு மம்தா பேசினார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, எனது தொலைபேசி அழைப்பை ஏற்று பேசினார். அப்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் படும் பாடுகள் பற்றி அவரிடம் எடுத்துரைத்தேன். இந்தப் பிரச்சினை குறித்து பேச எல்லா அரசியல் கட்சி பிரதிநிதிகளும் அவரை சந்திக்க விரும்புவதை கூறினேன்.

வரும் 16 அல்லது 17-ம் தேதி எல்லா அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்திப்பதாக குடியரசுத் தலைவர் ஒப்புக் கொண்டார். அதற்காக அவருக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசுத் தலைவரை சந்திக்கும் போது, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை விரிவாக எடுத்துரைப்போம்.

இவ்வாறு ட்விட்டரில் மம்தா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்