கேரள தமிழாசிரியர்கள் பணி நீக்கம் தமிழ்ச்சங்க பேரவை கண்டனம்

By செய்திப்பிரிவு

அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை செயல் தலைவர் மு.மீனாட்சி சுந்தரம் திங்கள்கிழமை பெங்களூரில் ‘தி இந்து' விடம் கூறியதாவது:

கேரள மாநிலத்தில் தமிழாசிரியர்களாகப் பணியாற்றி வந்த 1,300 பேரை,அம்மாநில அரசு பணிநீக்கம் செய்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.அந்த செய்தி பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு மிகுந்த கலக்கத்தை தருகிறது.

தமிழ் மாணவர்கள் தமிழில் கல்வி கற்கும் வகையில், தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும் என கேரள தமிழர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதனைத் தொடர்ந்தே அம்மாநில அரசு தமிழாசிரியர்களை பணி அமர்த்தியுள்ளது.

ஆனால் எவ்வித கால அவகாசமும் அளிக்காமல் தற்போது பணியமர்த்தப்பட்ட அத்தனை பேரையும் உடனடியாக‌ பணி நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 350 ஏ பிரிவின்படி ஒரு மாநிலத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் குழந்தை களுக்கு தேவையான‌ தொடக்க நிலைக் கல்வியை, அவர்களுடைய தாய்மொழியில் வழங்க தேவை யான நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொள்ள வேண் டும். கேரள அரசின் இத்தகைய உத்தரவு இந்த சட்டப்பிரிவை மீறும் வகையில் அமைந்துள்ளது.

எனவே கேரள அரசு உடனடியாக தனது ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்