பிளாஸ்டிக் பை பயன்படுத்தினால் அபராதம்: பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு

By இரா.வினோத்

கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் பெங்களூருவில் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆங்காங்கே வர்த்தக நிறுவனங்களும், பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளைப் பயன் படுத்துவது தொடர்கிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டங்களை வகுத்துள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி மக்கள் நல்வாழ்வுத் துறை ஆணையர் மஞ்சுநாத பிரசாத் கூறியதாவது:

பெங்களூருவில் பிளாஸ்டிக் பைகளைக் கட்டுப்படுத்த கடைகளிலும், பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிறுவனங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பிளாஸ்டிக் பயன் பாட்டை முழுமையாக ஒழிக்க‌ முடியவில்லை. பெங்களூருவில் தினமும் சேரும் குப்பைகளில் 5 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கின்றன.

இதைக் குறைக்கும் விதமாக பிளாஸ்டிக் பைகளை பொது மக்கள் பயன்படுத்தினால் முதன் முறை ரூ.500 அபராதம் விதிக்கப் படும். இதேபோல தொடர்ந்து பொதுமக்கள் பிளாஸ்டிக் பையை கையில் எடுத்துச் செல்லும்போது பிடிபட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இதுமட்டுமல்லா மல் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பேனர் உள்ளிட்ட 10 வகையான பொருட்களை தயா ரிக்கும் நிறுவனங்கள் விதியை மீறி னால் முதல்முறை ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதே நிறுவனம் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

49 mins ago

இந்தியா

38 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்