நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் சட்டத்திருத்த மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By பிடிஐ

நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர்கள் ஆகிய இனத்தவர்களை பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவில் சேர்க்கும் பட்டியல் இனத்தவருக்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழுவில் பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த மலையாளி கவுண்டர், நரிக்குறவர், குருவிக்காரர் ஆகிய இனத்தோரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுச்சேரியைச் சேர்ந்த இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களையும் பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல் அசாம், சத்தீஸ்கர், திரிபுரா மாநிலங்களிலும் மிகவும் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களை பழங்குடிப்பிரிவில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளித்ததற்காக அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்