அதிகார எல்லையை வரையறுக்க நீதித்துறைக்கு ஜேட்லி வலியுறுத்தல்

By பிடிஐ

ஆட்சி அதிகாரத்தின் எல்லைகளுக்குட்பட்ட விவாகரங்களை நீதித்துறை கையில் எடுத்துக்கொள்ள முடியாது. நீதித்துறை தங்கள் எல்லையை சரிவர நிர்ணயித்துக் கொள்வது அவசியம் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாடல் நிகழ்த்திய அருண் ஜேட்லி கூறியதாவது:

அதாவது “நீதித்துறையின் சீர்திருத்த செயல்பாடுகள் கட்டுப்பாடுடன் மேற்கொள்ளப்பட வெண்டும், ஏனெனில் நீதித்துறையின் சுதந்திரம், தனித்துவம் என்ற பெயரில் அடிப்படை அமைப்பின் அம்சங்களில் சமரசம் செய்து கொள்ள இடமில்லை.

நீதித்துறை சார்ந்த சீராய்வு நீதித்துறையின் நியாயமான பகுதிதான், ஆனால் அவர்களே தாங்கள் எதுவரை செல்ல முடியும் என்பதற்கான எல்லைக் கோட்டை வரைந்து கொள்ள வேண்டும். லஷ்மணன் கோடு மிக முக்கியமானது. ஆட்சியதிகாரத்தினால் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை நாங்கள்தான் எடுக்க வேண்டும் நீதித்துறை எடுக்கக் கூடாது.

அரசியல் ஆட்சி அதிகாரம் எடுக்கும் முடிவுகளை மக்கள் மாற்றக்கோரலாம், இல்லையெனில் தங்கள் வாக்களிப்பின் மூலம் அரசை ஆட்சியிலிருந்து அகற்றலாம்.

எனவே நீதிமன்றங்கள் ஆட்சி அதிகாரம் எடுக்கும் முடிவுகளை, இயற்றும் சட்டங்களை அதன் அரசியல் சாசன இயைபு குறித்து தங்கள் தீர்ப்புகளை வழங்கலாம்.

நீதிமன்றங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு பதிலீடு அல்ல எனவே ஆட்சி அதிகார எல்லைக்குட்பட்ட அதிகாரத்தை நீதித்துறை கையில் எடுத்துக் கொள்வது கூடாது.

மருத்துவ பொதுநுழைவு மற்றும் தேசிய தகுதி தேர்வு தீர்ப்பு குறித்து:

அதாவது மாநிலங்கள் பலவற்றில் கல்வி வாரியங்கள் சமமாக இருப்பதில்லை, அவர்கள் மொழியும் வேறு வேறாக உள்ளது. இவர்களை ஒரே பொதுத் தேர்வு என்ற அடிப்படையில் முடிவு செய்து தரம் என்ற ஒன்றை எழுப்பி ஒரே தேர்வை எழுதுமாறு கூற முடியுமா?

இதைத்தான் நான் இந்த அதிகாரம் ஆட்சி அதிகார எல்லைகளுக்குட்பட்டது என்று கூறுகிறோம். ஆனால் இதில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, இப்போது இதனை கையாளும் முறையை நாங்கள் பார்க்க வேண்டும்.

எது எப்படியிருந்தாலும், தேர்வுகளை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவது என்பதில் நீதித்துறையும் ஆட்சிஅதிகாரமும் ஒரே பக்கத்தில் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

நீதித்துறையின் சுதந்திரம் என்பது எப்படி அடிப்படை அமைப்பின் ஒரு பகுதியோ அது போல்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் கொள்கை வடிவமைப்பும், செயல்படுத்தலும் அடிப்படை அமைப்பின் ஒரு பகுதி.

நான் குறிப்பிட்ட எந்த ஒரு விவகாரம் குறித்து பேசவில்லை. மாறாக அரசமைப்புச் சட்டத்தன்மை என்பதைப் பற்றியே பேசுகிறேன்.

எனவே சீர்திருத்த செயல்பாடுகள் கட்டுப்பாடுடன், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும். இந்த இரண்டும் சம அளவில் செல்வது தான் சிறந்தது” என்றார் ஜேட்லி.

ஏற்கெனவே மாநிலங்களவையில் பட்ஜெட் மற்றும் வரி விதிப்பு அதிகாரங்களை நீதித்துறையின் வசம் விடக்கூடாது என்று அருண் ஜேட்லி கூறியதும், சரக்கு மற்றும் சேவை வரி விவகாரத்தில் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் பிரச்சினை எழுந்தால் நீதிபதி ஒருவர் தகராறை தீர்க்க முடியும் விதமாக குறைதீர் அமைப்பு வேண்டும் என்று காங்கிரஸார் கோரிக்கை வைத்தபோது அருண் ஜேட்லி, “உச்ச நீதிமன்றத்தை நாம் மதிக்கிறோம், ஆனால் ஒருவர் மற்றவர் விஷயத்தில் தலையீடு செய்யக்கூடாது” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்