அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில்: எஸ்.பி.தியாகியிடம் அமலாக்கத் துறை விசாரணை

By பிடிஐ

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டர் ஊழல் தொடர்பாக, இந்திய விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) விசாரணை நடத்தினர்.

முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர் கள் வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந் தத்தைப் பெற அந்த நிறுவனம் இந்தியர்களுக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக இத்தாலியில் தொடரப்பட்ட வழக்கில், லஞ்சம் வழங்கியதற்காக அந்த நிறுவனத் தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை வழங் கப்பட்டது. மேலும் லஞ்சம் வழங்கப் பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட் டது. குறிப்பாக, தீர்ப்பில் தியாகியின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.பி.தியாகி உட்பட 14 பேர் மீது சிபிஐ அமைப்பும் 21 பேர் மீது அமலாக்கத் துறையும் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன. மேலும் விமானப்படை முன்னாள் துணைத் தளபதி குஜ்ராலிடம் கடந்த வாரம் சிபிஐ விசாரணை நடத்தியது. மேலும் கடந்த திங்கள்கிழமை முதல் 3 நாட்களாக தியாகியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இதனிடையே அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதையடுத்து, டெல்லியில் உள்ள அத்துறையின் மண்டல அலுவலகத்தில் தியாகி நேற்று காலை 11 மணிக்கு ஆஜரா னார். அப்போது, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் தியாகியிடம் விசாரணை நடத்தப் பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வழக்கறிஞர் கவுதம் கைதான் மற்றும் தியாகியின் சகோதரர்களான சஞ்சீவ், ராஜீவ் மற்றும் சந்தீப் ஆகி யோரின் நிறுவனங்களுக்கு வெளி நாட்டிலிருந்து லஞ்சப் பணம் கைமாறி உள்ளதாக, கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை யில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்தாலி நிறுவனத் துடன் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ஏற்பட்டபோது பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விமானப்படைக்கு அமலாக்கத் துறை கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக உதவுமாறு வருமான வரித் துறைக்கும் நிதி புலனாய்வு பிரிவுக்கும் கோரிக்கை வைத் துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 min ago

இந்தியா

30 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்