மேற்குவங்க மாநிலத்தில் இன்று 4-ம் கட்ட தேர்தல்

By பிடிஐ

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமைச்சர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் 4-ம் கட்டத் தேர் தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி முன் எப்போதும் இல்லாத வகையில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநில சட்டப் பேரவைக்கு 6 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற் கெனவே 3 கட்டத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் வடக்கு 24 பர்கானாஸ், பித்தன்நகர் மற்றும் ஹவுரா மாவட்டங்களுக்குட்பட்ட 49 தொகுதிகளுக்கு இன்று 4-ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக் கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும் இந்த தேர்தலுக்காக 12,500 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. மொத்தம் 1.08 கோடி வாக் காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஆளும் திரிணமூல் காங்கிர ஸின் அமைச்சர்களான அமித் மித்ரா, புர்நேந்து பாசு, சந்த்ரிமா பட்டாச்சார்யா, பிரத்யா பாசு, ஜோதிபிரியோ முல்லிக் மற்றும் அரூப் ராய் உட்பட 345 வேட்பாளர் கள் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்களில் 40 பேர் பெண் வேட்பாளர்கள்.

3-ம் கட்டத் தேர்தலின் போது வன்முறை நிகழ்ந்ததில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இந்த தேர்தலுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்வதற்காக மத்திய ஆயுதப்படையினர் உள்பட 90,000 வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தரையில் மட்டுமின்றி தண்ணீரில் சென்றும் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் படி முதல் முறையாக அறிவுறுத் தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்