மேற்கு வங்க 4-ம் கட்ட தேர்தலில் 78 சதவீத வாக்குகள் பதிவு

By பிடிஐ

மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 49 தொகுதி களுக்கு நான்காம்கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 78.05 சதவீத வாக்குகள் பதிவாயின.

மொத்தம் 49 தொகுதிகளில் 345 வேட்பாளர்கள் களத்தில் உள்ள னர். இவர்களில் 40 பேர் பெண்கள். 12,500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 11 மணி வரை சுமார் 42 சதவீத வாக்குகள் பதிவாயின. கடும் வெப்பம் காரணமாக மதியம் வாக்குப்பதிவு மந்தமாக நடை பெற்றது. பிற்பகலில் ஓரளவு நிலைமை சீரடைந்தது. மாலை 3 மணி அளவில் 67 சதவீதமும் மொத்தமாக 78.05 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

நேற்று நடைபெற்ற தேர்தலில் நிதியமைச்சர் அமித் மித்ரா உட்பட 7 அமைச்சர்கள் போட்டியிட்டனர். முன்னாள் அமைச்சர் மதன் மித்ரா சாரதா நிதி மோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளதால் அவருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.

231 பேர் கைது

பாரக்பூர் பகுதியில் கள்ள வாக்கு, 144 தடையுத்தரவை மீறுதல் உள்ளிட்ட தேர்தல் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்ட 231 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை, காவல் ஆணையர் நீரஜ் சிங் உறுதி செய்துள்ளார்.

டம்டம் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் தன்மய் பட்டாச்சார்யா வின் கார் மீது சிலர் கல்வீசியதில், அவருக்கு கையில் காயம் ஏற் பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். பீஜ்புர் பகுதியில் மார்க்சிஸ்ட் தொண்டர் வீடு மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்