மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து துறை பயிற்சி

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், ஆத்மகூர் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்களை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

விழாவில் அவர் பேசும்போது, “நாட்டில் சுமார் 2.5 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. 3 சக்கர சைக்கிள், கருப்பு கண்ணாடிகள், கைத்தடிகள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

மாற்றுத் திறனாளிகளுக்காக நாடு முழுவதும் பல்வேறு தொழிற் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. விரைவில் இவர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சிகளும் அளிக்கப்படும். ஒவ்வொரு துறையிலும் இவர்கள் சாதிக்கும் வகையில் அனைத்து துறைகளின் சார்பிலும் பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்