ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கவுன்சில் தீர்மானம்

By ஆர்.ஷபிமுன்னா

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்தி திணிப்பு முயற்சியை கைவிட வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

சமூக வலைதளங்களிலும் சுற் றறிக்கைகளிலும் இந்தி மொழியை மட்டும் பயன்படுத்துமாறு அரசு துறைகளை நிர்ப்பந்திக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நட வடிக்கை கண்டிக்கத்தக்கது.

அரசின் இதுபோன்ற நடவடிக்கை, மக்களை வாட்டி வதைக்கும் சமூகப் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் முயற்சி ஆகும். மேலும் இது தேவையற்ற மொழி மோதல் களை உருவாக்கும். எனவே, இந்தியை ஒரே ஆட்சி மொழியா கத் திணிக்க முடியாது. தேசிய அளவில் கருத்தொற்றுமை ஏற்படும் வரையில் இந்தியும் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளா கத் தொடரவேண்டும். எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட் டுள்ள அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும் என தீர்மானம் வலியுறுத்துகிறது.

மேலும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டண உயர்வானது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும்.

பட்ஜெட்டுக்கு முன்பு இப்படி கட்டண உயர்வை அறிவிப்பது நாடாளுமன்றத்தை சிறுமைப் படுத்தி, மக்களைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் விவா தத்தை முடக்கும் முயற்சியாகும். எனவே, கட்டண உயர்வினை அரசு திரும்பப் பெறவேண்டும். இதற்காக முந்தைய அரசு அமைத்த சுயேச்சையான ஒழுங்குமுறை அதி கார அமைப்பை பொது நலன் கருதி மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என அந்தத் தீர் மானத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்