இந்தியாவில் புதிதாக 2.35 லட்சம் பேருக்குக் கரோனா; 871 பேர் பலி: அறிக 10 தகவல்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.35 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைவிட 6% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட பாசிடிவிட்டி ரேட், 15.88%ல் இருந்து 13.39% ஆகக் குறைந்துள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )

1. நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 10% ஆக உள்ளது. நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 4.91% ஆகக் குறைந்துள்ளது. அதாவது 20,04,333 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2. இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 1,65,04,87,260 (165 கோடி) ஆக உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்த தகுதி உடையோரில் 95% பேர் முதல் தவணை செலுத்திக் கொண்டனர். 74% பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

3. நாடு முழுவதும் கரோனாவால் 4,92,198 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 871 பேர் பலியாகினர்.

4. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று காணொலி வாயிலாக பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் சத்தீஸ்கர் மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

5. மகாராஷ்டிராவில் தான் கரோனா உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 103 பேர் உயிரிழந்தனர். நேற்று மட்டும் 24,948 பேருக்கு தொற்று உறுதியானது.

6. டெல்லியில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,044 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பாசிடிவிட்டி விகிதம் 8.60% ஆக உள்ளது.

7. தென்மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகாவில் ஒமைக்ரான் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக உள்ளது. அங்கு பரிசோதனை செய்யப்படும் மாதிரிகளில் 67.5% ஒமைக்ரான் வைரஸாக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக தொற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 26,533 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 32,79,284. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,20,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30,29,961.

8. கேரளாவில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அங்கு புதிதாக 54,537 பேருக்கு தொற்று உறுதியானது.

9. வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மிசோரத்தை தவிர மற்ற மாநிலங்களில் தொற்று குறைந்து வருகிறது. மிசோரத்தில் 2064 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.

10. உலகம் முழுவதும் அன்றாடம் சராசரியாக 20 லட்சம் பேருக்கு அன்றாடம் தொற்று உறுதியாகிறது. இதுவரை 54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சில புள்ளிவிவரம்:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,35,532.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 4,08,58,241.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,35,939.

இதுவரை குணமடைந்தோர்: 3,83,60,710

சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 20,04,333 (4.91%)

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 13.39% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 871.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,92,198.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்