நிர்வாக திறன் மிக்கவர் பிரதமர் நரேந்திர மோடி: என்சிபி தலைவர் சரத் பவார் பாராட்டு

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் லோக்சட்டா என்ற மராத்தி நாளிதழ் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார் பங்கேற்றார்.

இதில் பிரதமர் மோடி தொடர்பான ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:

பிரதமர் மோடி நிறைய முயற்சி கள் எடுக்கிறார். காரியங்கள் செய்து முடிக்கப்படுவதற்கு போதிய அவகாசம் கொடுக்கி றார். எந்தவொரு பணியையும் எடுத்துவிட்டால், அந்தப் பணி முடியும் வரை நிற்காமல் பார்த்துக் கொள்கிறார். நிர்வாகத்தில் அவருக்கு நல்ல பிடிப்பு உள்ளது. அது அவரது வலுவான பக்கமாக உள்ளது. அதேவேளையில் நிர்வாகத்தால் எடுக்கப்படும் முடிவுகள் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால், ஒருவர் கடின உழைப்பாளியாக இருந்தால் மட்டும் போதாது, அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க முடியாது. இந்த அம்சத்தில் அவரிடம் ஒரு குறைபாட்டை நான் காண்கிறேன்.

தனது அரசின் கொள்கைகள் திறம்பட செயல்படுத்தப் படுவதற்கு அரசு நிர்வாகமும் தனது சகாக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதை மோடி வலியுறுத்துகிறார்.

பிரதமர் மோடி தனது சகாக்களை தன்னுடன் அழைத்துச் செல்வதில் வித்தியாசமான முறையை கொண்டுள்ளார். மன் மோகன் சிங் போன்ற முன்னாள் பிரதமர்களிடம் அந்தப் பாணி இல்லை. இவ்வாறு சரத் பவார் கூறினார்.

சரத் பவார் தொடர்ந்து பேசும்போது, “மகாராஷ்டிர அமைச்சர்கள் சிலருக்கு எதிராக சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து நான் ஒருபோதும் பிரதமரிடம் பேசிய தில்லை. வருங்காலத்திலும் பேச மாட்டேன்’’ என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

29 mins ago

சினிமா

25 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

49 mins ago

க்ரைம்

55 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்