சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ.78.92 கோடி

By செய்திப்பிரிவு

கோட்டயம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்புபூஜைகளுடன் நடை சாத்தப்பட்டது. மகரவிளக்கு விழாவுக்காக கோயில் மீண்டும் 30-ம் தேதி திறக்கப்படும்.

தரிசனத்துக்காக பக்தர்கள் 31-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 14-ம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது. சபரிமலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் வாரியத் தலைவர் கே.அனந்தகோபன் நேற்று கோட்டயத்தில் கூறியதாவது:

மண்டல பூஜை காலத்தில் நவம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை சபரி கோயிலுக்கு ரூ.78.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 10.35 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்ததால் கோயிலுக்கு ரூ.8 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. 2019-ல் கோயிலின் வருமானம் ரூ.156 கோடியாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவசம் வாரிய அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்களுக்காக எருமேலியில் இருந்து பம்பை செல்லும் பாரம்பரியமான காட்டுப்பாதை திறந்துவிடப்படும். டிசம்பர் 31-ம் தேதி முதல் பக்தர்கள் இந்தப் பாதையில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்