மேற்குவங்கத்தில் இடதுசாரி முன்னணி தேர்தல் அறிக்கை வெளியீடு

By பிடிஐ

மேற்குவங்க மாநிலத்தில் கருத்து சுதந்திரம் மீட்டெடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து இடதுசாரி முன்னணி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்துக்கு 6 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின் றன. ஆளும் திரிணமூல் காங் கிரஸை இந்த தேர்தலில் வீழ்த்தும் வகையில் இடதுசாரி முன்னணி நேற்று 16 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட் டுள்ளது. அதில் ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் மீண்டும் மீட்டெடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து இடதுசாரி முன்னணி தலைவர் பீமன் போஸ் கூறும்போது, ‘‘இந்த தேர்தல் மூலம் மாநிலத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தவேண்டும். இதற்காக ஜனநாயக முறை யிலான மதச்சார்பற்ற அரசு அமை வதற்கு மக்கள் ஒற்றுமையுடன் அணி திரள வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த தேர்தல் அறிக்கை யில், ‘பாஜக போன்ற மதவாத சக்திகளை பலவீனமாக்க, திரிணமூல் காங்கிரஸை வீழ்த்து வது அவசியம். மத்தியில் உள்ள பாஜக அரசின் பொருளாதார கொள்கை பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்