காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுவடைகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிசம்பர் 2-ம் தேதியான நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடலில் புயலாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, டிசம்பர் 2-ம் தேதியான நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடலில் புயலாக வலுவடையும்.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரையை டிசம்பர் 4-ம் தேதி காலைக்குள் சென்றடைய வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக டிசம்பர் 1-2 தேதிகளில் அந்தமான் &நிகோபார் தீவுகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்; டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் வடக்குக் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் பரவலாக கன மழை பெய்யும்.

டிசம்பர் 3-ம் தேி முதல் 5-ம் தேதி வரை பரவலாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப்பகுதிகளில் மழை பெய்யும்.

டிசம்பர் 4 ஆம் தேதி கடலோர ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திராவில் குறிப்பிட்டப் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 secs ago

சினிமா

9 mins ago

சினிமா

12 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

10 mins ago

சினிமா

28 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

22 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

36 mins ago

வலைஞர் பக்கம்

40 mins ago

சினிமா

45 mins ago

மேலும்