25-ம் தேதி முதல் மீண்டும் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

வங்ககடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த சில நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக 25-ம் தேதி முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கீழ் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது.

இது அடுத்த 4-5 நாட்களில்மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது.

முன்னெச்சரிக்கை:

கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே மற்றும் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மற்றும் மிகவும் பரவலாக மழை பெய்யும்.

அடுத்த 5 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யும்.

அடுத்த 5 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, கேரளா & மாஹேயில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதேசமயம் அடுத்த 2 நாட்களில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மற்றும் வடக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் குளிர் அலை வீசுவதற்கு மிகவும் சாத்தியம் உள்ளது. அதன் பிறகு குறையும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்