லடாக் திரைப்பட விழா தொடக்கம்

By செய்திப்பிரிவு

மூன்றாம் ஆண்டு லடாக் சர்வதேச திரைப்பட விழா, இயக்குநர் கமல் ஸ்வரூப்பின் தேசிய விருது பெற்ற திரைப்படமான 'ரங்பூமி' திரையிடலுடன் தொடங்கியது.

இந்த மூன்று நாள் விழா சமயகுரு த்ருக்பா துக்சே ரின்போச்சேயால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது இந்தித் திரைப்பட இயக்குநர்கள் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, அமோல் குப்தே, நடிகை தீப்தி நாவால் மற்றும் நடிகர் ரஜித் கபூர் ஆகியோர் உடனிருந்தனர்.

விழாவை தொடங்கி வைத்துப் பேசிய த்ருக்பா துக்சே ரின்போச்சே, "என் வாழ்க்கையில் திரைப்படங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. என்னுடைய இரண்டு வயதில் லடாக்கைவிட்டு நான் வெளியேறினேன். நான் மீண்டும் திரும்பி வந்தபோது லடாக் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிந்திருக்கவில்லை. அப்போது திரைப்படங்கள்தான் எனக்கு உதவின. திரைப்படங்கள் முக்கியமானதும் பார்க்கப்பட வேண்டியதுமாகும்" என்றார்.

இவ்விழாவின் புரவலரும், கடந்த ஆண்டு இவ்விழாவைத் தொடங்கி வைத்தவருமான பிரபல பாடலாசிரியர் குல்சார், இந்த முறை விழாவுக்கு வரவில்லை.

"குல்சார் அடுத்த ஆண்டு விழாவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே வந்துவிடுவதாக என்னிடம் கூறியுள்ளார்" என்றார் இயக்குநர் மெஹ்ரா. இவரின் 'பாக் மில்கா பாக்' கடந்த ஆண்டு விழாவில் தொடக்கப் படமாகத் திரையிடப்பட்டது.

"இந்த விழாவில் நான் மீண்டும் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் அவர்.

இந்த ஆண்டு கொரிய நாட்டுத் திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்பட உள்ளன. மொத்தம் 67 படங்கள் திரை யிடப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்