பல்கலைகழகங்களில் அதிகரித்து வரும் சமூகரீதியிலானப் புகார்கள்: அலட்சியம் காட்டும் பல்கலை. மானியக் குழு

By ஆர்.ஷபிமுன்னா

நாட்டின் பல்வேறு பல்கலைகழகங்களில் சமூகரீதியிலானப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதன் மீதான நடவடிக்கைகளில் மத்திய அரசின் பல்கலைகழக மானியக் குழு(யுஜிசி) அலட்சியம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.

கேரளா பல்கலழகத்தின் முனைவர் ஆய்வு மாணவியான தீபா மோஹனன் பத்து நாள் போராட்டம் நடத்தினார். இதற்கு அவருக்கு நேர்ந்த சமூகரீதியான சித்ரவதைகள் காரணமானது.

இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலித் அமைப்பினரின் கருத்தரங்கு கானொலி வாயிலாக நடைபெற்றது. இதில், தீபாவிற்கானது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பல்வேறு பல்கலைகழகங்களில் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகின.

இப்பிரச்சனை ஹைதராபாத்தின் மத்திய பல்கலைகழகத்தின் மாணவர் ரோஹித் வெமுலா சம்பவத்திற்கு பின் வெளியில் தெரியத் துவங்கியது. இதில், தலித் மாணவரான வெமுலா, 2016 இல் தற்கொலை செய்து கொண்டார்.

இதன் பிறகும் அப்பல்கலைகழகத்தில் ஒரு சம்பவம் ஏற்பட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஹைதராபாத் பல்கலைகழகத்தில் ஒரு இணையதளம் உருவாக்கவும் முயற்சிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் மத்தியப் பல்கலைகழகமான பனராஸ் இந்து பல்கலை.யிலும் 11 தலித் மற்றும் 4 பழங்குடி மாணவர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்தவகை புகார்கள் அதன் மீதான நடவடிக்கைகளை தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என யுஜிசிக்கு அனைத்து கல்விநிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

எனினும், இதை பெரும்பாலானக் கல்வி நிலையங்கள் கடைப்பிடிப்பதில்லை எனவும், இதன் மீது யுஜிசியும் நடவடிக்கைகள் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் இக்கருத்தரங்கில் தெரிந்துள்ளது.

இது குறித்து இணையதளக் கருத்தரங்கில் பேசிய டெல்லி பல்கலைகழகத்தின் பேராசிரியரும் அம்பேத்கர்வாதியுமான முனைவர்.என்.சுகுமார் கூறும்போது, ‘‘பல பல்கலைகழகங்கள் பிரச்சனையை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காகவே தாம் அமைத்தக் குழுக்களை பயன்படுத்துகின்றனர்.

இவற்றில் ஒன்றான டெல்லி பல்கலைழகம் அதன் மீதான புள்ளிவிவரங்களையும் யுஜிசியிடம் சமர்பிப்பதில்லை. பல பல்கலைகழகங்களில் அளிக்கப்பட்டப் புகார்களை வாபஸ் பெறும்படியும் மாணவ, மாணவிகளும் வற்புறுத்தப்படுகிறது.’’ எனத் தெரிவித்தார்.

இது குறித்து தலித் அறிவுஜீவிகள் குழுவின் இணையதளக் கருத்தரங்கின் அமைப்பாளரான முனைவர்.சி.லக்ஷமணன் கூறும்போது, ‘‘யுஜிசியுன் அறிவுறுத்தல்களுடனான சுற்றறிக்கையில் வெறும் சடங்குகளாக உள்ளன.

தனது உத்தரவை அமலாக்குவதில் யுஜிசிக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை. இதுவரையும் அதன் உத்தரவை மீறியக் கல்விநிலையங்கள் எவர் மீதும் யுஜிசி நடவடிக்கை எடுத்ததில்லை.’’ எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்