இந்திய வானொலியை விரும்பிக் கேட்கும் பாகிஸ்தான் மக்கள்

By செய்திப்பிரிவு

அகில இந்திய வானொலியின் இணைய சேவை விரும்பி கேட்கப்படும் வெளிநாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது.

நியூஸ் ஆன் ஏர் செயலியின் மூலம் அகில இந்திய வானொலி நேரலை நிகழ்ச்சிகளை விரும்பி கேட்கும் நாடுகளின் சமீபத்திய பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, முதல் 10 இடங்களில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

பட்டியலுக்குள் சவுதி அரேபியா மீண்டும் வந்துள்ள நிலையில், நியுசிலாந்தும் குவைத்தும் அதிலிருந்து வெளியேறியுள்ளன.

ஏஐஆர் நியுஸ் 24*7, எஃப் எம் ரெயின்போ மும்பை, அஸ்மிதா மும்பை மற்றும் அகில இந்திய வானொலி பஞ்சாபி முதல் இடங்களில் மீண்டும் வந்துள்ளன. சென்னை ரெயின்போ மற்றும் கொடைக்கானல் வானொலி முதல் 10 இடங்களில் முறையே 6 மற்றும் 8-ம் இடங்களில் உள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஃபிஜி, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் ஜெர்மனி ஆகியவை நியூஸ் ஆன் ஏர் செயலியின் மூலம் அகில இந்திய வானொலி நேரலை நிகழ்ச்சிகளை விரும்பி கேட்கும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன.

அகில இந்தியா வானொலி தமிழ், சென்னை ரெயின்போ மற்றும் சென்னை எஃப் எம் கோல்டு ஆகியவை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விரும்பி கேட்கப்படுகின்றன.

கொடைக்கானல் வானொலி, காரைக்கால் வானொலி, கோயம்புத்தூர் எஃப் எம் ரெயின்போ, சென்னை ரெயின்போ, திருச்சிராப்பள்ளி எஃப் எம் ரெயின்போ உள்ளிட்டவை சிங்கப்பூரில் விரும்பி கேட்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 mins ago

ஜோதிடம்

39 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்