முழு கொள்ளளவை எட்டும் கேஆர்எஸ் அணை: த‌மிழகத்துக்கு கர்நாடகா 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

By இரா.வினோத்

கர்நாடகாவில் கடந்த 2 வாரங் களாக‌ குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ள‌ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் (கேஆர்எஸ்) அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள‌ கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 121.75 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 10,097 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் 3 அடியே உள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து தமிழகத்துக்கு விநா டிக்கு 6,205 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதுகுறித்து காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டை காட்டிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு குறைந்த அளவுதான் மழை பொழிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அணை 120 அடியை கடந்தது, நேற்று முன்தினம் மீண்டும் 120 அடியை கடந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீரைதிறந்துவிட வேண்டும். கேஆர்எஸ்அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறந்து விடுவதால், அணை நீர்மட்டம் உயர்வதில் சிரமம் ஏற்படுகிறது. தொடர்ந்து கனமழை பொழிந்தால் கேஆர்எஸ் அணை இன்னும் சில தினங்களில் முழு கொள்ளளவை எட்டும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

53 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

58 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்