நிலச்சரிவுகளில் உயிரிழப்பு 54 ஆனது; உத்தராகண்ட் மழை பாதிப்பு: அமைச்சர் அமித் ஷா ஆய்வு

By செய்திப்பிரிவு

உத்தராகண்ட் மாநிலத்தில் பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ரூ.7,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

இந்நிலையில், உத்தரா கண்டில் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பார்வையிட்டார். இதற்காக டெல்லியில் இருந்து டேராடூனுக்கு அமித் ஷா நேற்று காலை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். அமித் ஷாவுடன் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஆளுநர் குர்மித் சிங், மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் ஆகியோர் உடன் சென்றனர். பின்னர், முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். நிவாரணப் பணிகளுக்கு தேவை யான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்த அமித் ஷா, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளு மாறு அறிவுறுத்தினார்.

உயிரிழப்பு அதிகரிப்பு

நிலச்சரிவில் சிக்கி ஏற்கெனவே 48 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளி்ல் சிக்கி 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்