போலீஸ் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

By செய்திப்பிரிவு

அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள், யூனியன் பிரதேசங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். நாட்டின் பாதுகாப்பு நிலவரம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்புபணிகளில் போலீஸாரிடையே ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சமீபகாலமாக காஷ்மீரில் அப்பாவி மக்களை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கி வருகின்றனர். வெளிமாநிலத் தொழிலாளர்களையும் சுட்டுக் கொன்று வருகின்றனர்.

பிஹாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்களை இரண்டு நாட்களுக்கு முன் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள், டெல்லியின் எல்லைப் பகுதிகள் மற்றும் உ.பி.யில் விவசாயிகளின் போராட்டம் ஆகியவை குறித்தும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. போலீஸார் விழிப்புடன் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றும் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்