கோவிட்:  கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால் பயனில்லாமல் போய்விடும்: மாண்டவியா எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கோவிட் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால், கரோனா தொற்று கட்டுப்படுத்தல் நடவடிக்கை கேள்விக்குறியாகி விடும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரித்துள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசி வழங்கலின் முன்னேற்றம் குறித்து மாநில அதிகாரிகளுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஆய்வு செய்தார். அனைத்து முக்கிய மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள் மற்றும் திட்ட இயக்குநர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநிலங்களில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து மன்சுக் மாண்டவியா கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:

100 கோடி டோஸ்களை வழங்குவதே இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசி பயணத்தின் உடனடி மைல்கல் . 94 கோடி தடுப்பூசி மருந்துகளை இந்தியா இதுவரை வழங்கியுள்ளது.

புனிதம், மகிழ்ச்சி மற்றும் பெரும் கூட்டங்கள் பண்டிகைகளின் அடையாளமாக உள்ளது. கோவிட் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால், கோவிட்-19 தொற்று கட்டுப்படுத்தல் நடவடிக்கை கேள்விக்குறியாகி விடும்.

கோவிட் விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாக பின்பற்றுவதும், தடுப்பூசி வழங்கலை துரிதப்படுத்துவதுமே இதற்கான இரட்டை தீர்வாகும்.

மாநிலங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

22 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்