குஜராத் வழியாக பாகிஸ்தான் சென்ற சீன கப்பலில் ஆயுதம் கடத்தல்: என்ஐஏவுக்கு வழக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

குஜராத் வழியாக பாகிஸ்தான் சென்ற சீன கப்பலில் ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சீன சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் குஜராத்தின் காண்ட்லா துறைமுக பகுதியை கடந்த போது சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் மடக்கி சோதனை நடத்தினர்.

சாய ஆலைக்கு தேவையான உபகரணங்கள் கொண்டு செல்வ தாக சீன கப்பலின் மாலுமிகள் விளக்கம் அளித்தனர். ஆனால் அந்த கப்பலில் நீண்ட தொலைவு ஏவுகணைகளை தயாரிப்பதற்கான உபகரணங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து சீன கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக வருவாய் புலனாய்வு துறை (டிஆர்ஐ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) உதவி கோரப்பட்டது. டிஆர்டிஓ நிபுணர்களின் ஆய்வில் கப்பலில் இருந்த உபகரணங்கள் ஏவுகணை தயாரிப்பதற்கான ஆயுதங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

தேச பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கு, தற்போது தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப் பட்டுள்ளது. இதுகுறித்து என்ஐஏ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி சீன கப்பல் வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த வழக்கில் உண்மைகளை வெளிச் சத்துக்கு கொண்டு வருவோம்" என்று தெரிவித்தார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

54 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்