வருமான வரி ரிட்டர்ன் தாக்கலுக்கு டிசம்பர் 31 வரை கால அவகாசம்

By செய்திப்பிரிவு

பொதுவாக நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை வரை அளிக்கப்படும். தற்போது அது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பல்வேறு தரப்பில் இருந்தும் வரி ரிட்டர்ன் தாக் கல் செய்வதற்கான கால அவகா சத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கால அவகாசத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்து நேற்று சுற்றறிக்கை வெளியிட்டது.

இந்திய வருமான வரி சட்டம் 1961-ன் படி நிதி மதிப்பீட்டு ஆண் டான 2021-22-க்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.

2020-21ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அது ஜனவரி 15, 2022 வரை நீட் டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பரிவர்த்தனை மேற்கொள்ளும் தனி நபர்கள் 92இ விதிமுறைப்படி 2020-21-ம் ஆண்டுக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவகாசம் அக். 31 வரை அளிக்கப்பட்டிருந்தது. அது நவம்பர் 30 வரை நீட் டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக் கையை வருமான வரித்துறை ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ளார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்