கன்னத்தில் அறைந்த விவகாரம்: ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கினார் இந்தி நடிகர் கோவிந்தா

By ஏஎன்ஐ

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தான் கன்னத்தில் அறைந்த நபருக்கு நடிகர் கோவிந்தா ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிலிமிஸ்தான் ஸ்டூடியோவில் கடந்த 2008-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் திரைப்பட படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அவரை சந்திக்க வந்த ராய் என்ற ரசிகரை பலரது முன்னிலையில் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் மனம் உடைந்த ராய், நடிகர் கோவிந்தா மீது வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ‘பாதிக்கப்பட்ட ராய்க்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கி, நடிகர் கோவிந்தா நேரில் சென்று பகிரங்க மன்னிப்பு கேட்டு இரு வாரங்களுக்குள் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் கோவிந்தாவின் வழக்கறிஞர் நேற்று ராயை சந்தித்து ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக வழங்கி, நீதிமன்ற உத்தரவுப்படி கோவிந்தா சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

எனினும் இந்த இழப்பீடால் தனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை என தெரிவித்துள்ள ராய், நீதிமன்ற உத்தரவுப்படி கோவிந்தா நேரடியாக தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்