பாஜக பொதுச் செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கு தயாராகுமாறு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பாஜக பொதுச் செயலாளர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார். மகாராஷ்டிரம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

கட்சியின் 10 பொதுச் செயலா ளர்களை, பிரதமர் மோடி தனது இல்லத்தில் நேற்று காலை சுமார் 1 மணி நேரம் சந்தித்துப் பேசினார். அரசு நிர்வாகத்தை மேம்படுத்தவும், கட்சியை வலுப்படுத்தவும் அவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்த மோடி, அரசையும் மக்களையும் இணைக்கும் பாலமாக செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு கட்சி நிர்வாகிகளை மோடி சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறை. டெல்லி அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை மோடி இன்று (ஞாயிறு) மாலை சந்திக்கிறார். அப்போது மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு கட்சியை தொடர்ந்து அமைப்பு ரீதியிலான வலுவுடனும் துடிப்புட னும் நீடிக்கச் செய்வதற்காக இந்த சந்திப்பு நடைபெறுவதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கூறினர்.

மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியிலும், பிஹார், ஜார்க் கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங் களில் அடுத்த ஆண்டிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கட்சி பொதுச் செயலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், இந்தத் தேர்தல்களை சந்திக்கத் தயாராகும்படி பிரதமர் கேட்டுக்கொண்டார். மேலும் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங் களில் 2016-ல் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலையும் சந்திக்கத் தயாராகவேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பொதுச் செயலாளர்கள் ராம்பால், அமித்ஷா, அனந்தகுமார், தர்மேந்திர பிரதான், வருண் காந்தி, ராஜீவ் பிரதாப், முரளிதர் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கட்சிக்கு புதிய நிர்வாகிகள்

கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், துணைத் தலைவர்கள் ஜூவல் ஓரம், உமா பாராதி, ஸ்மிருதி இரானி, பொதுச் செயலாளர்கள் அனந்தகுமார், தாவர்சந்த் கெலாட், தர்மேந்திர பிரதான் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் கட்சியின் பொருளாளர் பியூஷ் கோயல், செய்தித் தொடர்பாளர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கும் இடம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சிக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ள னர். கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு அமித்ஷா, பொதுச் செயலாளர் ஜே.பி.நட்டா, கட்சி யின் குஜராத் மாநில மேலிட பொறுப் பாளர் ஓம் பிரகாஷ் மாத்தூர் ஆகியோரி டையே போட்டி நிலவுவதாக கூறப்படு கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்